பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

launcher

263

leadless chip carrier


launcher:ஏவி,தொடக்கி:மேக்சஎஸ் இயக்க முறைமையில்,அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகளையும்,நிரல்களையும்,பயனாளர் ஒற்றைச்சுட்டிச் சொடுக்கில் இயக்கவகை செய்யும் ஏவு நிரல்.

.la.us:.எல்.ஏ.யுஎஸ்:ஓர் இணையதள முகவரி அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

layered panel:அடுக்குப் பாளம்.

layered interface:அடுக்குநிலை இடைமுகம்: கணினி வன்பொருளுக்கும் அதில் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளுக்கும் இடையே ஒன்று அல்லது மேற்பட்ட நிலைகளில் இருந்து செயல்படக் கூடிய நிரல்கூறுகள்.முடிக்க வேண்டிய பணிகளுக்கேற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பயன்பாட்டையும் அது செயல்படும் வன்பொருளையும் நேரடித் தொடர்பின்றி பிரிப்பதே அடுக்குநிலை இடைமுகத்தின் நோக்கம்.முடிவில் இதுபோன்ற இடைமுகம்,ஒரு நிரலை வெவ்வேறு வகைக் கணினிகளில் இயங்கச் செய்வது சாத்தியமாகும்.

layout,character:எழுத்து உருவரை.

lazy evaluation:சோம்பல் மதிப்பாய்வு; மடிமதிப்பாய்வு:தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம்.மிகப்பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தகவல் கட்டமைப்புகளை சரியான நேரத்தில் திறன்மிக்க முறையில் கையாள்வதற்கு மடிமதிப்பாய்வு முறை உதவுகிறது.

.lb:எல்பி:ஓர் இணையதள முகவரி லெபனான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.lc:எல்சி: ஓர் இணையதள முகவரி செயின்ட் லூசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

LCD projector:எல்சிடி படப்பெருக்கி: நீர்மப் பழகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள்படும் Liquid Crystal Display Projector grairp தொடரின் சுருக்கப் பெயர்.ஒரு கணினியின் ஒளிக்காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி மூலம் பெரிய திரையில் படமாகக் காட்டும் கருவி.

lead ion battery:ஈய அயனி மின்கலன்: மின்சக்தியைச் சேமித்து வைக்கும் சாதனம், வேதியல் சக்தியை மின்சாரச் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அமில ஊடகத்தில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அயனிகள் பாய்கையில் மின்னுற்பத்தி நடைபெறுகிறது.

leadless chip carrier:இணைப்பிலா (சில்லு) சிப்புச் சுமப்பி:பலகையில் சிப்புகளைப் பொருத்தும் ஒரு வழிமுறை.சிப்பினை பலகையில் இணைக்க கால்கள் போன்ற பின்கள் கிடையாது. சாதாரணத் தொடர்புகளே இருக்கும்.சிப்பு ஒரு பொருத்து வாயில் (socket) பொருத்தப்பட்டிருக்கும்.பொருத்துவாயின்