பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

learning partner programme

264

legacy system


அடிப்பகுதியில் தொடர்புகள் இருக்கும்.அதன் மூலம் மின்இணைப்புக் கிடைத்துவிடும். இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சிப்பு பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.

learning partner programme:கல்விப் பங்காளர் நிரல்;கல்விப் பங்காளர் நிகழ்ச்சி.

least significant bit:மீக்குறை மதிப்புத் துண்மி: ஒன்று அல்லது மேற்பட்ட பைட்டுகள் கொண்ட ஓர் இரும எண்ணில் குறைந்த மதிப்பு (value)உள்ள துண்மி(பிட்) பொதுவாக வலது ஓரத்தில் உள்ளது.

least significant character:மீக்குறை மதிப்பு எழுத்து:ஒரு சரத்தில் வலது ஓரத்தில் உள்ள எழுத்து.எல்எஸ்சி(LSC)என்பது தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

LED printer:எல்இடி அச்சுப்பொறி: ஒளி உமிழ் இருமுனைய அச்சுப் பொறி என்று பொருள்படும் Light Emitting Diode Printer என்ற தொடரின் சுருக்கச் சொல்.எல்இடி,லேசர், எல்சிடி அச்சுப்பொறிகளின் முக்கியமான வேறுபாடு ஒளி மூலம் ஆகும்.எல்இடி அச்சுப்பொறிகளில் ஒளி உமிழும் இருமுனையங்களின்(Diodes)கோவை(Array) பயன்படுத்துகின்றன.

left arrow:இடது அம்புக்குறி.

left justification:இடது ஓரச்சீர்மை: சொல்செயலி,கணினிப் பதிப்பகப்பணிகளில் உரையைத் தட்டச்சு செய்து,இடப்புற ஓர இடைவெளியை ஒட்டி ஒருசீராக வரிகளை அமைத்தல்.வரிகளின் வலப்புற ஓரங்கள் சீராக இருப்பதில்லை.

left justified:இடப்புற ஓர்ச்சீர்மை.

legacy:மரபுரிமை;மரபுவழி:கொஞ்ச காலத்துக்கு முன்பு நிலவிய ஆவணங்களை அல்லது தகவல்களைப் பற்றியது.ஒரு செயலாக்கத்தில் அல்லது தொழில்நுட்பத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது.இந்த மாற்றத்தின் காரணமாக, பழைய தகவல் கோப்புகளைப் புதிய முறைமைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

legacy data:மரபுவழித் தகவல்:ஒரு நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இன்னொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏற்றுக் கொள்ளும் நிறுவனம்,இருக்கும் தகவலை மரபுரிமையாக தகவலின் முந்தைய உடைமையாளரிடமிருந்து பெறுகிறது.

legacy hardware:பேற்று வன்பொருள்:

legacy system:மரபுவழி முறைமை:ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்கும்.புதிய பதிப்புகளை நிறுவும்போது மரபுவழி முறைமைகளுடன் ஒத்திசைவு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.(எ-டு) இருக்கின்ற வணிகப் பரிமாற்ற விற்று வரவு ஏடுகளை,புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விரிதாள் மென்பொருள், செலவும் நேரமும் அதிகம் எடுத்துக்கொள்ளும் புதிய வடிவமாற்றம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுமா? பெரும்பாலான மரபு வழி முறைமைகள் பெருமுகக் கணினி