பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

legend

265

licensing key


அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் அவை கிளையன்/வழங்கன் கட்டுமானம் மூலம் மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன.

legend:படக்குறிப்பு: ஒரு வரைகலைப் படத்தின் அடியில் அதனை விளக்கி விவரிக்கும் உரைப்பகுதி.ஒரு வரைபடத்தில் அல்லது இயல்படத்தில் படக்குறிப்பு என்பது வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோரணி அல்லது குறியீடுகளை விளக்குவதாக இருக்கும்.

Lempel ziv algorithm:லெம்பல் ஜிவ் படிமுறை:தகவல் கோப்புகளை அவற்றின் உள்ளடக்கத்திற்குப் பங்கமின்றி அளவினைச் சுருக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணிதப் படிமுறைத் தருக்கம்.

length,block:தொகுப்பு நீளம்;தொகுதி நீளம்.

length,fixed block:மாறாத் தொகுதி நீளம்.

length,record:ஏட்டின் நீளம்.

'length record,fixed:மாறாத் தொகுதி நீளம்.

less time:குறைந்த காலம்.

letter:எழுத்து மடல்.

letterbomb:கடிதக் குண்டி:பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம்.சில வேளைகளில் நச்சுநிரல் (virus) மடலில் மறைந்திருக்கலாம். பெறுபவரின் கணினியில் மறைந்திருந்து தாக்கும் ட்ரோஜான் குதிரை நச்சுநிரலாக இருக்கலாம்.சில வேளைகளில் மடலின் செய்தியே மிகப் பெரிதாக இருந்து அஞ்சல்பெட்டியை நிரம்பி வழியச் செய்யலாம்.

letter translation:எழுத்து மொழிமாற்றம்.

level,access:அணுகு மட்டம்;அணுகு நிலை.

level address,zero:பூச்சிய நிலை முகவரி; அடிநிலை முகவரி.

level language,hígh:உயர்நிலை மொழி.

level language,low:அடிநிலை மொழி.

lexicon analyser:சொற் பகுப்பான்.

..lib.us:லிப்.யுஎஸ்:ஓர் இணையதள முகவரி, அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு நூலகத்துக்குரியது என்பதைச் சுட்டும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

library function:உள்ளிணைப்பு செயற்கூறு:நூலகச் செயல்கூறு.

licence policy:உரிமக் கொள்கை.

license agreement:உரிம ஒப்பந்தம்; ஒரு மென்பொருள் விற்பனையாளருக்கும் ஒரு பயனாளருக்கும் இடையேயான ஒரு சட்ட ஒப்பந்தம்.மென்பொருள் தொடர்பாக பயனாளருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடும்.இந்த உரிம ஒப்பந்தம் பயனாளர் மென்பொருள் தொகுப்பை பிரிக்கும்போதே நடைமுறைக்கு வந்துவிடுகிறது.

licensing key:உரிம விசை;உரிமத் திறவி; உரிமத் திறவுகோல்:உரிமம் பெற்ற ஒரு மென்பொருளை நிறுவும் போது, நுழைசொல்லாகப் பயன்