பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

light dots

266

linear list


படும் ஒரு சிறிய எழுத்துச்சரம்.உரிமம் பெற்ற மென்பொருளை சட்டத்துக்குப் புறம்பாக நகலெடுப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் உரிமத் திறவுகோலான இந்துழை சொல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக பயன்படுத்தப்படுகிறது.

light dots:ஒளிப்புள்ளிகள்.

lightest:மிகு ஒளிர்மை;மிகவும் லேசான.

light pen:ஒளிப்பேனா:ஓர் உள்ளிட்டுச் சாதனம்.கணினித் திரையுடன் இணைக்கப்பட்ட ஓர் எழுத்தாணி.இந்த எழுத்தாணியைக் கொண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சின்னங்களைச் சுட்டி,எழுத்தாணியின் பக்கவாட்டிலுள்ள ஒரு விசையை அழுத்தித் தேவையானதைத் தேர்வு செய்யலாம்.அல்லது எழுத்தாணியால் திரைப்பரப்பைத் தொட்டுத் தேர்வு செய்யலாம். இது,சுட்டி மூலம் தொட்டுச் சொடுக்குவதற்கு இணையானது.

lighting:ஒளியூட்டு.

light source:ஒளி மூலம்.

light sensitive:ஒளி உணர்வு;ஒளி உணரி.

light weight directory access protocol: குறைச்சுமை கோப்பக அணுகு நெறிமுறை: இது ஒரு பிணைய நெறிமுறை.டீசிபி/ஐபி நெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டது.எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது.கணினியிலுள்ள தகவல் குவிப்பைத் தேடி பயனாளர் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பாதுகாப்புச் சான்றிதழ் அல்லது தொடர்புக்கான பிற தகவல் இவைபோன்ற ஒரு குறிப்பிட்ட தகவல் குறிப்பைப் பெறுவதற்கான ஒற்றைக் கருவியை இந்த நெறிமுறை பயனாளர்களுக்கு வழங்குகிறது.

light weight internet person schema: குறைச்சுமை இணைய நபர் திட்ட வரை: குறைச்சுமைக் கோப்பக அணுகு நெறிமுறையில், பயனாளர் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தகவலைப் பெற்றுத் தருவதற்கான வரன்முறை.

LIM EMS:லிம் இஎம்எஸ்:லோட்டஸ்/இன்டெல்/மைக்ரோசாஃப்ட் விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும்.Lotus/Intel/ Microsoft Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

limiter:வரம்பி.

limit to list:வரம்புப் பட்டியல்.

linear addressing architecture:தொடரியல் முகவரியிடல் கட்டுமானம்: ஒற்றை முகவரி மதிப்பைக் கொண்டு ஒரு தனிப்பட்ட நினைவக இருப்பிடம் எதையும் நுண்செயலி அணுகுவதைச் இயல்விக்கும் கட்டுமானம்.இதன்படி, முகவரியிடத்தகு நினைவக எல்லை முழுமையிலும் ஒவ்வொரு நினைவக இருப்பிடங்களும் ஒரு தனித்த வரையறுத்த முகவரியைப் பெற்றுள்ளன.

linear list:தொடரியல் பட்டியல்: உறுப்புகளின் வரிசைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியல்.இப்பட்டியலில் முதல் உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர் உறுப்பினைத் தொடர்ந்து அடுத்ததாக இடம் பெறும்.கடைசி உறுப்பு தவிர