பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

address arithmatic

25

address mask


address arithmatic : முகவெண் கணக்கீடு; முகவரிக் கணக்கீடு.

address bar : முகவரிப் பட்டை.

address, base : தள முகவெண்; தள முகவரி; அடிமுகவரி; தொடக்க முகவரி.

address book : முகவரி புத்தகம்; முகவரி சேமிப்பு நூல்; முகவரி கையேடு : ஒரு மின்னஞ்சல் மென்பொருளில், மின்னஞ்சல் முகவரிகளையும் அவர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியல். அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப வேண்டியவர்களின் முகவரிகளைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். முதல் முறையாக அஞ்சல் அனுப்புபவரின் முகவரியையும் முகவரிப் புத்தகத்தில் சேமித்துக் கொள்ள முடியும். பட்டியலிலுள்ள ஒருவருக்கு அஞ்சல் அனுப்ப நினைக்கும்போது, முகவரிப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

address buffer : முகவெண் தாங்கி; முகவரி இடையகம்.

address bus : முகவரிப் பாட்டை; முகவெண் மின் இணைப்புத் தொகுதி : கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண்செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தகவலை ஏந்திச் செல்லப் பயன்படும் மின்இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்பிட முகவரிகளைக் குறிப்பிடும் சமிக்ஞைகளை ஏந்திச் செல்லும் பாட்டை 'முகவரிப் பாட்டை' எனப்படும். இது பெரும்பாலும் 20 முதல் 64 வரையிலான தனித்தனி தடங்களின் சேர்க்கையாக இருக்கும்.

address calculation : முகவெண் கணக்கீடு; முகவரி கணக்கீடு.

address decoder : முகவெண் கொணர்வி, முகவரி குறிவிலக்கி : எண்களால் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவக முகவரியை, ரேம் சில்லுகளிலுள்ள நினைவக இருப்பிடங்களைத் தேர்வு செய்யும் வகையாக மாற்றித் தரும் ஒரு மின்னணு சாதனம்.

address, direct : நேரடி முகவெண்; நேரடி முகவரி.

address field : முகவெண் புலம்.

address, indirect : மறைமுக முகவெண், மறைமுக முகவரி.

address, instruction : முகவெண்; அறிவுறுத்தல்; ஆணை முகவரி; அறிவுறுத்த முகவரி.

address, machine : எந்திர முகவெண், பொறி முகவரி.

address mapping table : முகவெண் பதிலீட்டு அட்டவணை : கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்துள்ள ஓர் இணைய தளத்தின் களப்பெயரை, இணைய நெறிமுறை முகவரியாக (internet protocol address) பதிலீடு செய்யப்பட்ட விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, md2.vsnl.net.in என்ற இணைய தள முகவரி இணையான 202.54.1.30 என்னும் ஐபி முகவரி அவ்வட்டவணையில் இருக்கும்.

address mask : முகவெண் மறைப்பான்; முகவரி மறைப்பு : ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தகவல்