பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

live project

270

localization


உருவார மொழி (Virtual Reality Modelling Language)ஆகும்.இணையப் பயனாளர்கள் மெய்நிகர் நடப்பு உலகைப் பார்வையிடவும் ஊடாடவும் அனுமதிக்கும் மென்பொருள்.

live project:நடப்புத் திட்டம்; நேரடிசெய்முறைப் பயிற்சி;நிகழ்நேரத் திட்டம்.

.lk:எல்கே: ஓர் இணையதள முகவரி, இலங்கை நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

loaded line:சுமையேற்று தடம்/ இணைப்பு: தகவல் தொடர்புக்கான கம்பித்தடத்தில் மின்னோட்டத்துக்கு ஏற்ப மாறும் மின்தடையைச் சேர்த்து வீச்சுச் சிதைவினை (Amplitude distortion)குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. அலைபரப்பு ஊடகமான கம்பி வடத்தில் சுமைச்சுருணைகளை (loading coils) இணைப்பது.பெரும்பாலும் ஒரு மைல் தொலைவு இடைவெளிகளில் இவை இணைக்கப்படும்.

loader:ஏற்றி.

loader,card:அட்டை ஏற்றி.

loader routine:ஏற்று நிரல்கூறு: இயக்குறு குறிமுறைக் கோப்புகளை நினைவகத்தில் ஏற்றி, இயக்கும் ஒரு நிரல்கூறு.ஓர் ஏற்று நிரல்கூறு இயக்கமுறைமையின் ஓர் அங்கமாக இருக்கலாம் அல்லது இயங்கும் நிரலின் ஒருபகுதியாகவும் இருக்கலாம்.

loading பளுவேற்றம்;ஏற்றம்:நிரலேற்றம்.

local group:உள்ளமை குழு;வட்டாரக் குழு; 1.விண்டோஸ் என்டியிலுள்ள பயனாளர்குழு.குழு உருவாக்கப்பட்டுள்ள பணிநிலையக் கணினியின் வளங்களை மட்டும் கையாளும் உரிமையும் சலுகையும் பெற்ற ஒரு பயனாளர் குழு.பணி நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பயனாளர்கள் பணிநிலைய வளங்களை அணுக வசதியான ஒரு வழிமுறையை வட்டாரக் குழுக்கள் வழங்குகின்றன.2.விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர் இயக்கமுறைமையில் வட்டாரக் குழு என்பது அதன் சொந்தக் களம் (own domain) அமைந்துள்ள வழங்கன்(server)கணினிகளின் வளங்களை மட்டும் அணுக உரிமையும் சலுகையும் பெற்ற பயனாளர்களின் குழு,களத்தின் வெளியேயும் உள்ளேயும் உள்ள பயனாளர்கள், அவர்கள் சார்ந்த களத்தின் வழங்கன்களிலுள்ள வளங்களை மட்டும் அணுக வட்டாரக் குழுக்கள் வாய்ப்பாக உள்ளன.

localhost:உள்ளமை புரவன்:ஒரு டீசிபி/ஐபீ செய்தி அனுப்பப்படும் அதே கணினியை புரவனாக உருவகிக்கும் பெயர்.உள்ளமை புரவனுக்கு அனுப்பப்படும் தகவல் பொட்டலம் 127.0.0.1என்ற ஐபீ முகவரியைக் கொண்டிருக்கும்.ஒரே கணினி கிளையனாகவும் புரவனாகவும் செயல்படும். உண்மையில் அச்செய்தி இணையத்திற்கு அனுப்பி வைக்கப்படமாட்டாது.

localization:வட்டாரமயமாக்கல்: ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல் முறை. (எ-டு).சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள்