பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

address memory

26

advanced power management


களை தடுக்கப் பயன்படும் ஓர் எண். எடுத்துக்காட்டாக, xxx.xxx.xxx.yyy என்ற முகவரியைப் பயன்படுத்தும் ஒரு பிணையத்தில், அதில் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அதே முதல்முகவரி எண்களைப் பயன்படுத்துகையில், மறைப்பான் xxx.xxx.xxx முகவரிகளை மறைத்து விட்டு yyy முகவரியிலுள்ள குறிப்பிட்ட எண்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும்.

address memory : நினை முகவெண் முகவரி; நினைவக முகவரி.

address mode : முகவெண் முறை; முகவரிப் பாங்கு : கணினி நினைவகத்தில் ஒரு முகவரியைக் குறிப்பிடும் வழிமுறை. absolute address, indexed address, paged address, relative address போன்ற சொற்களையும் காண்க.

address, multi : பன்முகவெண்; பன்முகவரி.

address, one : ஒற்றை முகவரி.

address part : முகவரி பகுதி.

address port : துறை முகவரி.

address, real : உண்மை முகவெண்; மெய் முகவரி.

address, reference : மேற்கோள் முகவெண், குறிப்பு முகவரி.

address, specific : குறித்த முகவெண்; குறிப்பிட்ட முகவரி.

address resolution : முகவெண் அறிதல் : முகவெண் பதிலீட்டு அட்டவணையில், ஒரு வன் பொருள் உறுப்பின் முகவரியைக் கண்டறிதல்.

address resolution protocol : முகவெண் கண்டறி நெறிமுறை.

address, variable : மாறுமுகவெண் .

address, virtual : மெய்நிகர் முகவரி; மாயமுகவெண்.

address, zero level : சுழிநிலை முகவெண்.

addresable : அழைதகு முகவரி.

addressing : முகவெண்ணிடல்; அழைத்தல்.

addresing, absolute : முற்று முகவெண்ணிடல்; முற்று முகவரியிடல்.

addressless instruction formate : முகவரியிலா கட்டளை வடிவம்.

ADI (Apple Desktop Interface) : ஏடிஐ (ஆப்பில் கணினி இடைமுகம்).

adjacency operator : அண்மைய செயற்குறி.

adjective : பெயரடை.

adjust to : சரியாக்க.

adjust : சரிசெய்தல்.

advanced course : உயர்நிலைப் பாடத்திட்டம்.

advanced digital network : உயர்நிலை இலக்கமுறைப் பிணையம் : தகவல் ஒளிக்காட்சி (Video) மற்றும் ஏனைய இலக்கமுறை சமிக்ஞைகளை மிகவும் நம்பகத் தன்மையுடன் அனுப்பும் திறன்வாய்ந்த தனி தடச் சேவை. தகவல் தொடர்பு நிறுவனங்கள் சிறப்புச் சேவையாக இதனை வழங்குகின்றன. இத்தகைய உயர்நிலைப் பிணையங்களில், பெரும்பாலும் வினாடிக்கு 56 கிலோ (துண்மி) பிட்டு-க்கு அதிகமான வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

advanced power management : உயர்நிலை மின்சார மேலாண்மை : கணினி அமைப்புகளில் குறிப்பாக, மின்கலன்களால் இயங்குகின்ற மடிக்கணினிகளில் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு