பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



mapped drives

280

massively parallel processing



mapped drives : தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள் : 1. விண் டோஸ் சூழலில், உள்ளக இயக்கக (Local drive) எழுத்துகளைத் தாங்கி யுள்ள பிணைய வட்டகங்கள் அங்கிருந்தே அணுக முடியும். 2. யூனிக்ஸில், இயக்க முறைமைக்கு அறிமுகப்படுத்தபட்டுச் செயல்படும் நிலையிலுள்ள வட்டகங்கள்.

mark, tape : நாடா குறியீடு.

marker, end of file : கோப்பு இறுதிக் குறியீடு.

marginal min. value : குறைந்தபட்ச மதிப்பு.

marginal max. value : அதிகபட்ச மதிப்பு.

markup language : குறியிடு மொழி : ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சியாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப் படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணினிக்கு அறிவுறுத்தும் குறியீடு களின் தொகுதியைக் கொண்ட மொழி. (எ-டு): மீவுரைக் குறியீடு மொழி (HTML) வலைப்பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது. 2. செந்தரப் பொதுமைக் குறியீடு மொழி (SGML) அச்சுக் கோத்தல் மற்றும் கணினிப் பதிப்பகப் பணி களுக்கும் மின்னணு ஆவணங்களுக் கும் பயன்படுகிறது. இதுபோன்ற குறியிடு மொழிகள் பணித்தளம் சாரா ஆவணங்களை/கோப்புகளை உரு வாக்கப் பயன்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கிடையே கையாண்டு கொள்ளவும் வழி செய்கின்றன.

marquee : நகர் தொடர்; திரையில் இடவலமாக வலஇடமாக நகர்ந்து செல்லும் சொல்தொடர்.

mask bit : மறைப்புத் துண்மி : கணக்கீட்டில் இடம்பெறும், இரும துண்மிகளால் (Binary Bits) ஆன ஒரு தரவு மதிப்பினை ஒரு குறிப்பிட்ட தருக்கச் செயற்குறி (logical operator) மூலம் செயல்படுத்தும்போது, தரவு மதிப்பிலுள்ள அனைத்து 1-களையும் அப்படியே தக்கவைக்குமாறு செய்ய முடியும் அல்லது அனைத்து 1-களை யும் 0-ஆக மாற்றிவிடவும் முடியும். மறைப்பு மதிப்பில் இப்பணியைச் செய்யும் அந்தக் குறிப்பிட்ட துண்மி, மறைப்புத் துண்மி எனப்படுகிறது. (எ-டு): தரவு மதிப்பு 00001111 என்க. மறைப்பு எண் 11111111 என்க. இந்த இரண்டு எண்களையும் (உ-ம்) (AND) செய்வோம் எனில் விடை, 00001111 எனக் கிடைக்கும். இங்கே மறைப்பு எண்ணில் உள்ள கடைசி நான்கு துண்மி(bits)களும் மறைப்பு துண்மி களாக செயல்படுகின்றன. இவை தரவு மதிப்பிலுள்ள நான்கு 1-களையும் மாற்றமின்றி அனுமதிக்க உதவுகின்றன.

massively parallel processing : பெருமளவு இணைநிலைச் செய லாக்கம் : ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரோம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென் பொருளின் நகலும் அதில் ஏற்றப் பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக் கூடிய தகவல் பகுதி, ரோமில் இருக்கும்.