பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



maximize

282

MDA



maximize : பெரிதாக்கு; உச்சப் படுத்து : வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) ஒரு சாளரத்தை விரிவாக்கி தாய்ச் சாளரம்அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் செய்தல்.

maximize button : பெரிதாக்கு பொத்தான் : விண்டோஸ் 3.x, விண் டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி ஆகியவற்றில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் அமைந் துள்ள ஒரு பொத்தான். தாய்ச் சாளரம் அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, இந்தப் பொத்தான் மீது சொடுக்கினால் போதும்.

maximize and minimize buttons : பெரிது, சிறிதாக்கும் பொத்தான்கள்.

maximum value : அதிகபட்ச மதிப்பு.

.mb.ca : .எம்பி.சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் மின்டோப் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MBONE or Mbone : எம்போன் : பல் முனை முனைப் பரப்புகை முதுகெலும்பு என்று பொருள்படும் Multicast back BONE என்ற தொடரின் சுருக்கம். பல் இணைய தளங்கள் இணைந்த சிறிய தொகுதி. ஒவ்வொரு தளமும் நிகழ் நேர கேட்பொலி மற்றும் ஒளிக் காட்சித் தகவல்களை பிற தளங் களுக்கு ஒரே நேரத்தில் பரப்பும் திறன்பெற்றவை. ஒன்றிலிருந்து பல வற்றுக்கு பல்முனைப் பரப்புகை ஐபீ (Multicast-IP) நெறிமுறையைப் பயன் படுத்தி அதிவேகத் தகவல் பொதி களை அனுப்பவும் பெறவும் உதவும் தனிச்சிறப்பான மென்பொருளை எம்போன் தளங்கள் பெற்றுள்ளன. ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் களுக்கு (video conferencing) எம்போன் பயன்படுகிறது.

Mbps : எம்பிபீஎஸ் : ஒரு வினாடியில் இத்தனை மெகா பிட்டுகள் என்று பொருள்படும் Megabits per second என்பதன் சுருக்கம். ஒரு மெகாபிட் என்பது ஏறத்தாழ பத்து இலட்சம் துண்மிகளைக் கொண்டது.

.mc : .எம்சி : ஒர் இணைய தள முக வரி மொனாக்கோ நாட்டைச் சேர்ந் தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MCGA : எம்சிஜிஏ : பல்வண்ண வரை கலைக் கோவை எனப் பொருள் படும் Multicolour Graphics Array என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கணினித் திரைக்காட்சிக்கான மின்சுற்று அட்டை.

MC : எம்சிஐ : 1. ஊடகக் கட்டுப் பாட்டு இடைமுகம் எனப் பொருள் படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். விண்டோஸ் இயக்க முறை மையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows API). பல்லூடகச் சாதனங்களை நிரல் மூலமாகக் கட்டுப்படுத்த உதவு கிறது. 2. தொலைதூரத் தொலை பேசி சேவை வழங்கும் ஒரு மிகப் பெரும் நிறுவனம். Microwave Communications Inc., என்பது அந் நிறுவனப் பெயர்.

.md : .எம்டி : ஒர் இணைய தள முகவரி மால்டோவாக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MDA : எம்டிஏ : ஒற்றைநிறத் திரைக் காட்சித் தகவி என்று பொருள்படும்