பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



MDI

283

memory cartridge



Monochrom Display Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1981-ல் ஐபிஎம் பீசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிக்காட் சித் தகவி. எம்டிஏ-யில் ஒரேயொரு ஒளிக்காட்சிப் பாங்கு மட்டுமே உண்டு. 25 வரிகள் 80 எழுத்துகள். ஒவ்வொரு எழுத்துகளுக்கும் அடிக் கோடு உண்டு; மின்னுதல் மற்றும் ஒளிர்தல் (Bright) பண்புகளும் உண்டு.

MD : எம்டிஐ : பல் ஆவன இடை முகம் என்று பொருள்படும் (Multi Document Interface) என்ற தொடரின் தலைப்பெழுத்து குறும்பெயர். சில பயன்பாட்டு மென்பொருள்களில் இருக்கும் பயனாளர் இடைமுகம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைத் திறக்க உதவுகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்செல் தொகுப்புகளில் உள்ளது. நோட்பேடு, வேர்பேடு ஆகியவற் றில் கிடையாது.

.md.us : .எம்டி.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

machanics : விசையியல், எந்திரவியல்.

media : ஊடகம் : கணினி அடிப் படையிலான தகவலைப் பதிவு செய்வதற்கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள்கள். கம்பி கள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகங்களாகப் பயன்படுகின்றன. மீடியம் - ஒருமை; மீடியா - பன்மை.

media access control : ஊடக அணுகு கட்டுப்பாடு.

media filter : ஊடக வடிகட்டி : 1. குறும்பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊடகங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத்தப் படும் சாதனம். (எ-டு): ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற் கும், உறையிடா முறுக்கிணை (UTP) வடத்திற்கும் இடையே பயன் படுத்தப்படுகிறது. ஊடக வடிகட்டி கள் செயல்பாட்டில் அனுப்பி வாங்கி களை ஒத்தவை. 2. தகவல் பிணையங் களில் சுற்றுச்சூழலிலிருந்து வரும் மின்னணு இரைச்சலை வடிகட்டி நீக்க இணைக்கப்படும் சாதனம். (எ-டு) இணையச்சு வட அடிப்படை யிலமைந்த புறப் பிணையங்களில் (Extranet) அருகமைந்த மின்னணுக் கருவிகளின் இடையூறு காரணமாய் தகவல் இழப்பு ஏற்படாமல் தவிர்க்க ஊடக வடிகட்டிகள் உதவும்.

medium model : நடுத்தர மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத் தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் தகவலுக்காக 64 கிலோபைட் நினைவக இடமே ஒதுக்கப்படும். நிரல் கட்டளைகளுக்கு ஒரு மெகா பைட் வரை இடம் ஒதுக்கப்படும்.

medium pitch : உறுப்பு; உறுப்பினர் : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் (class) வரையறுக்கப் படும் ஒரு மாறி (variable) அல்லது ஒரு வழிமுறை (mothod).

memory, associate: சார் நினைவகம்.

memory, bubble : குமிழி நினைவகம்.

memory core : உள்ளக நினைவகம்.

memory cartridge : நினைவகப் பொதியுறை : தகவல் அல்லது நிரல்