பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



memory check

284

memory model


 களை இருத்தி வைக்க உதவும் ரோம் (RAM) சில்லுகளைக் கொண்ட, செருகி எடுக்கவல்ல ஒரு பொதி யுறை. இவை பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட கங்களுக்கு மாற்றாக இந்தச் சிறிய எடை குறைந்த (ஆனால் விலை அதிகமான) பொதியுறைகள் பயன் படுகின்றன. நினைவகப் பொதி யுறைகளில் இருத்திவைக்கும் தகவல் அழியாமல் பாதுகாக்க இரு வகை நுட்பங்கள் பயன்படுத்தப்படு கின் றன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் உள்ளடக்கத்தை இழக்கா மல் பாதுகாக்கும் அழியா ரோம் பயன்படுத்தப்படுகிறது. அல்லது மறு பொதியுறைக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் மறு மின்னூட்ட மின்கலன்களின் துணை யுடன் ராம் தகவல் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.

memory check : நினைவக சரிபார்ப்பு.

memory dump : நினைவகச் சேமிப்பு; நினைவகத் திணிப்பு; நினைவு கொட்டல்.

memory, external : புற நினைவகம்.

memory, internal : அக நினைவகம்.

memory, magnetic : காந்த நினைவகம்.

memory main : முதன்மை நினைவகம்.

memory management programme : நினைவக மேலாண்மை நிரல் : 1. தகவல் மற்றும் நிரல் ஆணைகளை முறைமை நினைவகத்தில் இருத்தி வைத்தல், அவற்றின் பயன்பாட்டை கண்காணித்தல், விடுவிக்கப்படும் நினைவகப் பகுதியை மறு ஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் ஒரு நிரல். 2. நிலைவட்டின் (Hard Disk) ஒரு பகுதியை ரோம் நினைவகத்தின் நீட்டிப்பாய் பயன் படுத்திக் கொள்ளும் ஒரு நிரல்.

memory management unit : நினைவக மேலாண்மையகம் : மெய்நிகர் நினைவக முகவரிகளை (Virtual Memory Address) மெய்யான நினைவக முகவரிகளுக்குப் பொருத்துகின்ற திறன்பெற்ற வன்பொருள். 68020 செயலியை அடிப்படையாகக் கொண்ட கணினி களில், செயலியும் நினைவக மேலாண்மையகமும் தனித்தனி யானவை. ஆனால் இன்றைய நவீனக் கணினிகளில் நினைவக மேலாண்மையகம் மையச் செயலகத் தில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும். இன்னும் சில கணினிகளில் இவை நுண்செயலிக்கும் நினைவகத்திற்கும் இடையே பாலமாகச் செயல்படும். இந்த வகை நினைவக மேலாண்மை யகங்கள் முகவரி ஒன்றுசேர்ப்புப் பணிக்குக் காரணமாயிருக்கின்றன. டி'ரோம்களில் புதுப்பிப்புச் சுழற்சி களுக்குக் காரணமாயுள்ளன.

memory model : நினைவக மாதிரியம் : ஒரு கணினி நிரலில் உள்ள தகவல் களையும் குறிமுறைகளையும் (கட்டளைகளையும்) நினைவகத் தில் ஏற்றுவது தொடர்பான ஒர் அணுகுமுறை. நினைவகத்தில் தகவலுக்கு எவ்வளவு இடம், கட்டளை களுக்கு எவ்வளவு இடம் என்பதை நினைவக மாதிரியம்தான் தீர்மானிக் கிறது. பொதுவாகத் தட்டை நினை வகப் பரப்பினைக் கொண்டுள்ள பல கணினிகள் ஒற்றை நினைவக மாதிரியத்தையே ஏற்கின்றன. துண்டம் துண்டமான நினைவகப்