பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



message security protocol

286

metropolitan area exchange


 message security protocol : செய்திப் பாதுகாப்பு நெறிமுறை : இணை யத்தில் பரிமாறப்படும் செய்தி களுக் கான ஒரு நெறிமுறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மின்னஞ்சலை ஏற்கவோ புறக்கணிக்கவோ வழங்கன் கணினியில் அனுமதி பெற வேண்டும் என்பதுபோன்ற பாது காப்பு நடைமுறைகளை மேற் கொள்ள இந்நெறிமுறை வழி செய்கிறது.

message transfer agent : செய்திப் பரி மாற்று முகவர்.

messaging : செய்தியனுப்பல் : கணினி மற்றும் தகவல் தொடர்புக் கருவிகள் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் அல்லது தொலைநகல் மூலமாக ஒருவர் இன்னொருவருக்கு தகவல் அனுப்பும் முறை.

messaging application : செய்தி யனுப்பு பயன்பாடு : பயனாளர்கள் தமக்குள் செய்திகளை (மின்னஞ்சல் அல்லது தொலைநகல்) பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ஒரு மென் பொருள்.

messaging client : செய்தியனுப்பு கிளையன் : மின்னஞ்சல், தொலை நகல் வழியாக பயனாளர் ஒருவர் செய்திகளை அனுப்பிவைக்க உதவும் ஒரு பயன்பாட்டு நிரல். தொலை தூரத்தில் இயங்கும் வழங்கன் கணினி இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

messager : தூதுவர்; தகவலர்; செய்தி கொண்டு செல்பவர்.

messager for mail: அஞ்சல் தகவலர்; அஞ்சல் தூதுவர்.

meta content format : மீ உள்ளடக்க வடிவம் : ஒரு வலைப்பக்கம் ஒரு கோப்புத் தொகுதி, விண்டோஸின் முகப்புப் பக்கம், உறவுநிலைத் தரவுத் தளம் இவைபோன்ற கட்டமைப்பாயுள்ள தரவுகளின் உள்ளடக்கம் பற்றிய தகவலை விவரிக்கும் ஒரு திறந்தநிலை வடி வம். வரிசைமுறையாக்கம், அகராதி கள் மற்றும் விலைப்பட்டியல் களுக்கு இவ்வடிவத்தைப் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

meta data interchange specification : மீத்தரவு மாறுகொள் வரன்முறை : தகவல்களைப் பற்றிய தகவலை அதாவது மீத்தகவலை பரிமாறிக் கொள்ளல், பகிர்ந்துகொள்ளல், மேலாண்மை செய்தல் இவற்றைப் பற்றிய வரன்முறைகளின் தொகுதி.

metalanguage : மீமொழி : ஏனைய மொழிகளை விவரிக்கப் பயன்படும் ஒரு மொழி. நிரலாக்க மொழிகளை வரையறை செய்யப் பொதுவாக பேக்கஸ் நவுர் ஃபார்ம் (Backus Naur Form - BNF) என்னும் மீமொழி பயன் படுத்தப்படுகிறது.

meta - metalanguage : மீ-உயர் மொழி.

meta operating system : மீ இயக்க முறைமை : பல இயக்க முறைமை களை தனக்குக் கீழ் இயக்கவல்ல ஒர் இயக்க முறைமை.

metropolitan area exchange : மாநகரப் பரப்பு இணைப்பகம் : ஒரு மாநகரப் பரப்புக்குள் இணையச் சேவை நிலையங்கள் ஒன்றிணைக்கப் படும் இணைப்பகம். மாநகரப் பரப்புக்குள் இருக்கும் ஒரு பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்கு அனுப்பப்படும்