பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Advanced RISC

27

.ag


நிரலாக்க இடைமுகம் (API). மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. கணினி இயக்க நிலையில் நாம் பணியாற்றாமல் இருக்கின்றபோது, கணினியின் பாகங்கள் (தாய்ப்பலகை, செயலி, நிலைவட்டு, திரையகம்) மிகக்குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்படி இந்தநிரல் கட்டுப்படுத்தும்.

Advanced RISC : உயர்நிலை ரிஸ்க் : குறைந்த ஆணைத் தொகுதிக் கணினிப் பணி (Reduced Instraction Set Computing) என்பதை சுருக்கமாக ரிஸ்க் (RISC) என்றழைக்கின்றனர். நுண்செயலி வடிவாக்கத்தில் பயன் படுத்தப்படும் தொழில் நுட்பத்தை இது குறிக்கிறது. மிப்ஸ் கம்ப்யூட்டர் சிஸ் டம்ஸ் நிறுவனம், பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுக்கு இடையே இரும ஒத்தியில்பை (binary compatiblity) ஏற்படுத்தும் வண்ணம் ரிஸ்க் கட்டமைப்பு மற்றும் பணிச் சூழலுக்கென உருவாக்கிய வரையறுப்பு, உயர்நிலை ரிஸ்க் எனப்படுகிறது.

advanced RISC computing specification : உயர்நிலை ரிஸ்க் கணிப்பணி வரையறுப்புகள்: ரிஸ்க் செயலி அடிப்படையிலான ஒரு கணினி, உயர்நிலைக் கணிப்பணி பணித்தளத் தரத்தை எட்டுவதற்குரிய குறைந்தளவு மென்பொருள் தேவைகள்.

advanced controls : உயர்நிலை இயக்கு விசைகள்

advanced filter : உயர்நிலை வடிகட்டி.

advanced interactive executive : உயர்நிலை இடைப்பரிமாற்ற நிர்வாகி.

advanced SCSI programming interface : உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம் : ஸ்கஸ்ஸி புரவன் தகவி (host adapter)களுக்குக் கட்டளைகளை அனுப்புவதற்கு, அடாப்டெக் நிறுவனம் உருவாக்கிய ஓர் இடைமுக வரையறுப்பு (interface specification). இந்த இடைமுகம், நிரலுக்கு ஒரு கருத்தியல் அடுக்கினை (abstraction layer) வழங்குகிறது. எத்தகைய தகவி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நிரலர் கவலைப்படத் தேவையில்லை.

advanced search : மேம்பட்ட தேடல்.

af.mil : .ஏஎஃப்.மில் : அமெரிக்க நாட்டு விமானப் படையின் இணையதள முகவரி என்பதைக் குறிப்பிடும் களப் பெயர்.

AFK : ஏஎஃப்கே : விசைப் பலகையிலிருந்து விலகி எனப் பொருள்படும் Away From Keyboard என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலும், தகவல் பணிகளிலும் நிகழ்நேர அரட்டைகளில் இம்மரபுத் தொடர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வினாவுக்கு சட்டென்று பதிலிறுக்க முடியாத நிலையைச் சுட்டுகிறது.

AFS : ஏஎஃப்எஸ் : ஆண்ட்ரூ கோப்பு முறைமை என்று பொருள்படும் Andrew File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் பிணையங்களில் தொலைவிலுள்ள கோப்புகளை அணுகுவதற்கு வகைசெய்யும், பகிர்மானக் (distributed) கோப்பு முறைமை. கார்னெஜீ - மெல்லான் (Carneie - Mellon) உருவாக்கியது.

.ag : ஏஜி : இணையத்தில், ஆன்டி குவா மற்றும் பார்புடா பகுதிகளைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.