பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.mil

289

minimize button



தகவலாய் மாற்றப்பட்ட குறி முறையாகும்.

.mil : .மில்; .எம்ஐஎல் : அமெரிக்க நாட்டு இராணுவ அமைப்புகளின் இணைய தள முகவரிகளை அடை யாளம் காட்டும் களப் பெயர். .mil என்பது தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும்.

milicent technology : மில்லிசென்ட் தொழில்நுட்பம் : டிஜிட்டல் எக்யூப் மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இணைய நெறிமுறைத் தொகுதி. மிகச் சிறிய அளவிலான வணிகப் பரிமாற்றங்களைப் பற்றி யது. ஒருசென்டுக்கும் குறைவான விலையில் தகவல் குறிப்புகளை வாங்குவது தொடர்பான வணிக நடவடிக்கைகளைக் கையாள்வதற் கான நெறிமுறை.

MILNET : மில்நெட் : இராணுவப் பிணையம் என்று பொருள்படும் Military Network என்ற தொடரின் சுருக்கம். தொடக்க கால ஆர்ப்பா நெட்டின் இராணுவப் பிரிவை உருவகிக்கும் விரிபரப்புப் பிணை யம். அமெரிக்க நாட்டு இராணுவத் தகவல் போக்குவரத்துக்கானது.

MIMD : எம்ஐஎம்டி : பல் ஆணை பல் தரவு தாரைச் செயலாக்கம் எனப் பொருள்படும் (Multiple Instruction Multiple Data Stream Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணைநிலைச் செயலாக் கத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு வகை கணினிக் கட்டுமானம். இக் கணினி அமைப்பிலுள்ள ஒவ்வொரு மையச் செயலகமும் தனித்தனியே ஆணைகளைக் கொணர்ந்து தகவல் களின்மீது செயல்படுத்தும்.

MIME : மைம் : பல்பயன் இணைய முறையாகும். அஞ்சல் நீட்டிப்புகள் எனப் பொருள் படும் Multiple Internet Mail Extensions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆஸ்கி வடிவத்தில் மாற்றி அமைக்காமலேயே ஒலி, ஒளிக்காட்சி மற்றும் இரும (பைனரி) கோப்புகளை இணைய மின்னஞ்சல் வழியாக அனுப்ப வகை செய்யும் தர வரையறை. இது எஸ்எம்டீபீ (SMTP. Simple Mail Transfer Protocol) யின் நீட்டிப்பாகும். ஒர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை மைம் வகை சுட்டு கிறது. மைம் ஒத்தியல்புள்ள பயன் பாடு ஒரு கோப்பினை அனுப்பி வைக்கும்போது அந்தக் கோப்புக்கு ஒரு மைம் வகையைக் குறிப்பிட்டு அனுப்புகின்றது. பெறுகின்ற பயன் பாடும் மைம் ஒத்தியல்பானதாய் இருக்க வேண்டும். மைம் வகை/உள் வகைப்பட்டியலுடன் ஒப்பிட்டு, பெற்ற ஆவணத்தின் உள்ளடக் கத்தைச் சரியாகத் தீர்மானிக்கிறது. மைம் வகை உரை(text) எனில், சாதா (plain), ஹெச்டீஎம்எல் (html) என்ற இரு உள்வகை உள்ளன. மைம் வகை உரை/ஹெச்டீஎம்எல் எனில் அதை ஒர் ஹெச்டீஎம்எல் ஆவணமாக உலாவிகள் அடையாளம் காணும்.

mini : சிறு; குறு.

minimal : குறுமம்.

minimize button : சிறிதாக்கு பொத்தான் : விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான். இதன்மீது சுட்டியால் சொடுக்கும்போது சாளரம் மறைந்து கொள்ளும். விண்டோஸ் 3.x மற்றும் விண்டோஸ் என்டி 3.5 ஆகியவற்றில்

19