பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



minimal pairs

290

.mk


 முகப்புத் திரையிலேயே ஒரு சின்ன மாக அமர்ந்து கொள்ளும், விண் டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி 4.0 மற்றும் அதற்குப் பின்வந்த விண்டோஸ் இயக்க முறைமைகளில் திரையின் அடிப்பகுதியிலுள்ள பணிப்பட்டையில் (Taskbar) சாளரப் பெயர் ஒரு பொத்தானாக அமர்ந்து கொள்ளும். அந்தப் பொத்தான்மீது சொடுக்கும்போது சாளரம் முந்தைய அளவுக்கு விரியும்.

minimal pairs : குறும இணை ஒலிச் சொல் பட்டியல்.

minimum value : குறைந்தபட்ச மதிப்பு.

miniport drivers : சிறுதுறை இயக்கி கள் : ஒரு குறிப்பிட்ட சாதனம் குறித்த தகவலைக் கொண்டுள்ள இயக்கிகள். இவை சாதனம் சாரா துறை இயக்கி களுடன் தொடர்புகொண்டு அவற்றின் வழியாக கணினி முறைமையுடன் பேசிக்கொள்ளும்.

minitower : சிறு நெடுபெட்டி : தரை யில் செங்குத்தாய் நிற்கும் கணினி நிலைப்பெட்டி (cabinet). பொதுவாக கணினி முறைமைப் பெட்டி 24 அங்குல உயரம் இருக்கும். இதனை நெடுபெட்டி என்பர். சிறுநெடு பெட்டி 13அங்குல உயரமே இருக்கும்.

MIP mapping : மிப் பொருத்துகை; மிப் படமாக்கம் : குறைவில் நிறைய என்று பொருள்படும் Multi-turn Is Parvo (Much in Little என்பதன் லத்தீன் தொடர்) என்பதன் சுருக்கமே MIP எனப்படுகிறது. படமாக்கிய ஒரு படிமத்தைச் சுற்றுத் தொலைவி லிருந்தே முன்கணக்கிட்டு ஒரு வரைகோல (Texture) படமாக்கியில் பயன்படுத்தப்படுகிறது. படப்புள்ளி மாற்றுகை மனிதக் கண்புலனுக்

கேற்ப நிறங்களை மாற்றித்தரும் என்பதால், படமாக்கிய உருவங் களின் இதமான வரை கோலத்திற்கு வழிவகுக்கும்.

mirror site : பிம்பத் தளம் : ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணை யத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல் களைக் கொண்டிருக்கும் தகவல் போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அதிகமான தகவல் போக்குவரத்தைக் கையாள உயர்திறன் வழங்கனின் தேவையைப் தவிர்ப்பதற்காகவும் பிம்பத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

missconvergence : காட்சித் திருப்பம்.

misspelled words : பிழைச் சொற்கள்.

.mi.us : .எம்ஐ .யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிச்சி கன் மாநிலத்தைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

mixed cell reference : கலப்புக் கலக் குறிப்பு : விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய் பாடினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப்படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை (Row) அல்லது நெடுக்கை தொடர்புறு (Relative) குறிப்பாக இருக்கும் (வாய் பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த் தினாலோ தானாகவே மாறிக் கொள் ளும்). மற்றது நிலையாக இருக்கும். (வாய்பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ மாறாதது).

mixing : ஒலிக் கலவை.

mix with file : கோப்புடன் சேர்.

.mk : எம்கே : ஒர் இணைய தள முகவரி மாசிடோனியா நாட்டைச்