பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



monochrome printer

294

motion JPEG


 2. ஒரே நிறத்தையே வெவ்வேறு அடர்வுகளில் காண்பிக்கும் திறன் பெற்ற திரைக்காட்சி.

monochrome printer : ஒற்றை நிற அச்சகப்பொறி.

monographics adapter : ஒற்றை வரை கலைத் தகவி : ஒற்றைநிற உரை மற்றும் வரைகலைப் படங்களை மட்டுமே காட்டமுடிகிற ஒளிக்காட் சித் தகவி. செயல்பாட்டின் அடிப் படையில் ஹெர்க்குலிஸ் வரைகலை அட்டை (HGC)யுடன் ஒத்தியல்பு உடையது.

monolingual : ஒற்றைமொழி.

monolingual coding : ஒற்றைமொழிக் குறிமுறை.

monolithic kernel : ஒரு சீரானகருவகம்.

monospace font : சமஇட எழுத்துரு : தட்டச்சில் பயன்படுத்தப்படும் எழுத்துருவைப் போன்றது. ஒவ் வோர் எழுத்தும் கிடைமட்டத்தில் ஒரே அளவான இடத்தை அடைத்துக் கொள்ளும். (எ-டு) i மற்றும் m ஆகிய இரண்டு எழுத்துகளும் அவற்றின் அகலம் எப்படி இருப்பினும் அடைத்துக் கொள்ளும் இடம் ஒரே அளவானதாக இருக்கும்.

.montreal.ca : .மான்ட்ரீல்.சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டு மான்ட்ரீலைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

M00 : மூ : பொருள்நோக்கான மட் என்று பொருள்படும் MUD, Object Oriented என்ற தொடரின் சுருக்கம். MUD என்பது Multiuser Dungeon என்பதன் சுருக்கம். ஒரு பொருள் நோக்கு மொழியை உள்ளடக்கிய மட், மூ என்றழைக்கப்படுகிறது. பயனாளர்கள் தனிப்பரப்புகளையும் அதில் பொருள் உறுப்புகளையும் உருவாக்க முடியும். மூ, மட் பயன் பாட்டைவிட விளையாட்டுகளை உருவாக்கவே அதிகம் பயன்படுகிறது.

.moow : மூவ்; .எம்ஓஓவி : மெக்கின் டோஷ் கணினிகளில் பயன்படுத்தப் படும் குவிக்டைம் மூவி ஒளிக் காட்சிக் கோப்புகளைக் குறிக்கும் கோப்பின் வகைப்பெயர் (tile extension).

M00V : மூவ் : மெக்கின்டோஷின் குவிக்டைம் திரைப்படங்களுக்கான ஒரு கோப்பு வடிவம். உரை, கேட் பொலி, ஒளிக்காட்சி, கட்டுப்பாடு அனைத்தையும் ஒத்திசைந்த தடங்களில் சேமித்து வைக்கும்.

morpher : உருமாற்றி.

most significant bit : மிகு மதிப்பு பிட்: எண்ணின் ஒன்று அல்லது மேற் பட்ட பைட்களின் (bits) ஒர் இரும தொடர்ச்சியான துண்மிகளின் வரிசையில் அதிக இட மதிப்புக் கொண்ட துண்மி (bit). (அடையாள துண்மியைத் தவிர்த்து).

most significant character : மிகு மதிப்பு எழுத்து : ஒரு சரத்திலுள்ள இடது ஓர எழுத்து. MSC என்பது இத்தொடரின் சுருக்கம்.

motion JPEG : நகர்வு ஜேபெக் : நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரை யறை. ஒளிப்பட வல்லுநர் குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத்தையும் ஜேபெக் தர வரையறைப்படி இறுக்கிச் சுருக்கும்.