பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



.mq

297

multidrop network



1987இல் அளவீடுகள் மற்றும் சோதனைகளுக்கான சுவிஸ் கழகம் (Swedish Board for Measurement and Testing) உருவாக்கிய தன்முனைப்புத் தர வரையறை ஆகும். 1990இல் புதுப்பிக்கப்பட்டது.

.mq : .எம்.கியூ : ஒர் இணைய தள முகவரி மார்ட்டினிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mr : .எம்ஆர் : ஒர் இணைய தள முகவரி மெளரிட்டானியா நாட் டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MR : எம்ஆர் : மோடம் (இணக்கி) தயார் எனக்குறிக்கும் Modem Ready என்ற தொடரின் சுருக்கம். மோடத் தின் முன்பக்கப் பலகத்தில் (Panel) எரியும் ஒரு சிறு விளக்கு. மோடம் தயார் நிலையில் உள்ளதை உணர்த்துகிறது.

.ms : .எம்எஸ் : ஒர் இணைய தள முகவரி மான்ட்செர்ரட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MS-DOS mode : எம்எஸ் டாஸ் பாங்கு: விண்டோஸ் 95/98/என்டி போன்ற 32-பிட் இயக்க முறைமைகளில் பாவிக்கப்படும் எம்எஸ்டாஸ் பணிச் சூழலை வழங்கும் ஒரு செயல்தளம் (shell).

MS-DOS shell : எம்எஸ் டாஸ் செயல் தளம் : பயனாளர் எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் அல்லது எம்எஸ் டாஸில் பாவிக்கும் பிற இயக்க முறைமைகளில் செயலாற்ற அனுமதிக்கும் ஒரு சூழல்.

MSDOS.SYS : எம்எஸ்டாஸ்.சிஸ் : எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப் பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென்பொருள் இது.

.ms.us : .எம்எஸ்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிஸிஸிப்பி மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mt : எம்டி : ஒர் இணைய தள முகவரி மால்ட்டா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mu : .எம்யு : ஒர் இணைய தள முகவரி மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MUD : மட்; எம்யுடி : பல்பயனாளர் நிலவறை என்று பொருள்படும் Multiuser Dungeon என்ற தொடரின் சுருக்கம். இணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு நிகழ்நிலையில் ஒருவரோடு ஒருவர் ஊடாடி மகிழும் விளையாட்டு. இணையத்தில் நிலவும் ஓர் மெய்நிகர் சூழல்.

multi-access system : பன்முக அணுகு முறைமை.

multicast-backbone : பல்முனைப் பரப்பு முதுகெலும்பு.

multicasting : பல்முனைப் பரப்புகை : ஒரு பிணையத்தில், ஒரே நேரத்தில் ஒரு செய்தியை ஒன்றுக்கு மேற் பட்ட இலக்குகளுக்கு அனுப்பி வைக்கும் செயல்முறை.

multidrop network : பல்முனையப் பிணையம்.