பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

agent

28

allocation block size


agent : முகவர் நிரல் : 1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதாவது ஒரு நிகழ்வின் போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல், 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தகவல்களை ஆவணக் காப்பகங்களில் அல்லது தகவல் கருவூலங்களில் தேடிக் கண்டறிந்து தரும் ஒரு நிரல். பெரும்பாலும் இத்தகைய முகவர் நிரல்கள் இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவை ஒரே வகையான தகவல் சேமிப்புக் கருவூலங்களில் தேடுவதற்கென உருவாக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களைத் தேடுபவை. இணையத்தில் ஸ்பைடர் என்ற முகவர் நிரல் பயன்படுத்தப்படுகிறது. அறிவுக் கூருள்ள முகவர் என்றும் அழைக்கப்படும். 3. கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில், வழங்கன் கணினிக்கும், கிளையன் கணினிக்கும் இடையே இடையீடாக இருந்து செயல்படுவது. 4. எளிய பிணைய மேலாண் நெறிமுறையில் (Simple Network Management Protocol - SNMP) - பிணையப் போக்குவரத்தை கண்காணிக்கும் செயல்முறை.

.ai : .ஏஐ : இணையத்தில், அங்குயில்லாப் பகுதியைச் சார்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

aggregate operator : மொத்தமாக்கு செயல்குறி.

AGP - Accelarated Graphics Port : முடுக்கு வரைகலைத் துறை.

AIFF : ஏஐஎஃப்எஃப் : ஆப்பிள் மற்றும் சிலிக்கான் கிராஃபிக்ஸ் கணினிகளில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலித் தகவலைச் சேமிக்கும் கோப்பு வடிவம். ஒலியலை வடிவக் கோப்புகள் 8துண்மி (8-பிட்) வடிவில் சேமிக்கப்படுகின்றன.

AIX : ஏஐஎக்ஸ் : உயர்நிலை ஊடாடும் இயக்கநிலை என்று பொருள்படும் Advanced Interactive Executive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனம் தனது பணிநிலையக் கணினிகளிலும், சொந்தக் கணினிகளிலும் செயல்படுத்திய இயக்க முறைமை - யூனிக்ஸின் இன்னொரு வடிவம்.

alarm beep : எச்சரிக்கை ஒலி.

aligning : ஓரஞ் சீரமைத்தல்.

alignment/justify : ஓரச்சீர்மை.

algebra, boolean : பூலியன் இயற்கணிதம்.

align bottam : அடிவரி நேர்ப்படுத்தல்.

align property : சீரமை பண்பு.

align top : விளிம்புவரி நேர்ப்படுத்தல்.

all : அனைத்தும்.

allocate : ஒதுக்கு; ஒதுக்கிடு; ஒதுக்கி வை ; போதுமான நினைவகப் பகுதி அல்லது அதுபோன்ற, எந்தவொரு வளத்தையும் நிரலின் பிந்தைய பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைத்தல்.

allocation : ஒதுக்கீடு : இயக்க முறைமைகளில், ஒரு நிரல் பயன்படுத்திக் கொள்வதற்காக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும் முறை.

allocation block size : ஒதுக்கீட்டுத் தொகுதி அளவு : நிலைவட்டுப் போன்ற சேமிப்பு ஊடகங்களில் ஒரு தனிப்பட்ட தொகுதியின் கொள்ளளவு. வட்டின் மொத்தக் கொள்ளளவு மற்றும் பாகப்பிரிவுகளின்