பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



multipoint configuration

300

.mx



multipoint configuration : பல்முனை தகவமைவு : ஒரு தகவல் தொடர்பு இணைப்பு. பல நிலையங்கள் தொடர்ச்சியாக ஒரே தகவல் தொடர்புத் தடத்தில் இணைக்கப் பட்டிருக்கும். பொதுவாக, தகவல் தொடர்பு இணைப்பை ஒரு முதன்மை நிலையம் (ஒரு தலைமைக் கணினி) நிர்வகிக்கும். இணைக்கப்பட்ட ஏனைய நிலையங்கள் அதன் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கும்.

multi processor : பல் செயலி.

multi programming : பல் நிரலாக்கம்.

multi reel file : பல்சுருள் கோப்பு.

multi syllabus approach : பன்முகப் பாடத்திட்ட அணுகுமுறை.

multisync monitor : பல் ஒத்திசைவுத் திரையகம் : பலதரப்பட்ட செங்குத்து மற்றும் கிடைமட்ட ஒத்திசைவு வீதங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன் பெற்ற ஒரு கணினித் திரையகம். அத்திரையகங்களுக்கு பல்வேறு வகைப்பட்ட தகவிகளைப் (Adapters) பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏனெனில் அவை ஒளிக்காட்சிக் சமிக்கையில் ஒத்திசைவு வீதத்துக்கு ஏற்ப தாமாகவே தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை.

multi task : பல் பணி.

multithreaded application : பல்புரிப் பயன்பாடு : ஒரே நேரத்தில் ஒரு நிரலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிளைப்பணிகள், கிளைநிரல் புரி களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுவது. இந்த முறை யில் செயலி வாளா இருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது.

multi user file processing : பல் பயனாளர் கோப்புச் செயலாக்கம்.

multiway branching : பல்வழி கிளை பிரித்தல்.

MUSE : மியூஸ் : பல்பயனாளர் பாவிப்புப் பணிச்சூழல் என்று பொருள்படும் Multi User Simulation Environment என்பதன் சுருக்கம்.

mute : ஒலி நிறுத்தம்.

mutual exclusion : பரஸ்பர விலக்கம்: ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/ வெளியீட்டுத் துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுகுவதை உறுதிப்படுத்தும் முறை. அறைக் கதவில் நான் வேலை யாய் இருக்கிறேன்; இடையூறு செய் யாதீர் என்று ஒர் அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டு உள்ளே பணிகளை மேற்கொள்ளும் முறை யை ஒத்தது. ஒர் அறிவிப்புக் குறிப்பு அல்லது குறியீடு (semaphores/flags) மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல் களின்/நிரல்கூறுகளின் நடவடிக்கை கள் முறைப்படுத்தப்படுகின்றன.

.mv : .எம்வி : ஒர் இணைய தள முகவரி மாலத் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MVC architecture : எம்விசி கட்டுமானம்.

.mw : எம்டபிள்யூ : ஓர் இணைய தள முகவரி மாலாவி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mx : .எம்எக்ஸ் : ஒர் இணைய தள முகவரி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.