பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.na

302

national attachment point


N

.na : .என்.ஏ : ஒர் இணையதள முகவரி, நமீபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

named anchor: பெயரிட்ட நங்கூரம்: ஹெச்டிஎம்எல் மொழி ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறி சொல். ஒரு மீத்தொடுப்புக்கான இலக்கைக் குறிக்கிறது. பெயரிட்ட நங்கூரங்கள் பயனுள்ளவை. ஏனெனில் ஒர் ஆவணத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு தொகுப்பின் மூலம் தாவிச் செல்லப் பயன்படுகிறது. பெயரிட்ட இலக்கு என்றும் அழைக்கப்படும்.

name and location: பெயரும்,இருப்பிடமும்

name box : பெயர்ப்பெட்டி

name,file : கோப்புப்பெயர்

name of the font : எழுத்துருவின் பெயர். name value pair :பெயர் மதிப்பு இணை : பேர்ல் (Perl) நிரலாக்க மொழியில் ஒரு தகவல் தொகுதியில் தகவலானது ஒரு குறிப்பிட்ட பெயருடன் தொடர்புடையதாயுள்ளது.

NAMPS : நாம்ப்ஸ் : குறுங்கற்றை தொடர்முறை நடமாடும் தொலை பேசிச் சேவை என்று பொருள்படும் Narrow Band Analog Mobile Phone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். மோட்டோரோலோ நிறுவனம் முன்வைத்த தர வரையறை. தற்போதைய ஆம்ப்ஸ் (AMPS) செல் தொலைபேசி தரவரையறையை இலக்கமுறைக் சமிக்கைத் தகவலுடன் இணைத்து உருவாக்கப்பட்டது. உயர் செயல் திறன் மற்றும் அதிக ஆக்கத்திறனும் கிடைக்கும்.

narrow SCSI:குறுகிய ஸ்கஸ்ஸி: ஒருநேரத்தில் எட்டு துண்மி (bit) தகவலை மட்டுமே அனுப்பவல்ல ஸ்கஸ்ஸி அல்லது ஸ்கஸ்ஸி-2 இடைமுகம்.

NAT:நேட் :பிணைய முகவரி பெயர்ப்பு எனப் பொருள்படும் Network Address Translation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். அக இணையம் (Intranet) அல்லது பிற தனியார் பிணையங்களுக்குள் பயன்படுத்தப்படும் ஐபீ முகவரிகளையும் இணையத்தின் ஐபீ முகவரிகளையும் பெற இந்த அணுகுமுறை உதவுகிறது.

National Attachment Point : தேசிய இணைப்பு முனை : அமெரிக்காவில் தேசிய அறிவியல் கழகத்தினர் (National Science Foundation) இணையப் போக்குவரத்துக்கு அமைத்த நான்கு இணைப்பக முனைகளில் ஒன்று. இணையச் சேவையாளர்கள் தங்களுடைய பிணையத்தை ஏதேனும் ஒரு தேசிய இணைப்பு முனையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற இணையச் சேவை யர்களுடன் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும். நான்கு தேசிய இணைப்பு முனைகள் இருக்குமிடங்கள். (1) சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப்பகுதி (பசிபிக் பெல் நிறுவனம் இயக்குகிறது) (2)