பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



nethead

307

net.police


|

செல்வாக்குப் பெற்ற மரியாதைக் குரிய நபர்.

nethead : வலைக்கிறுக்கன் இணையப் பைத்தியம் : 1. இணையத்துக்கு அடிமையானவர் போல எந்நேரமும் இணையத்திலேயே மூழ்கிக் கிடப்பவர். 2. rec. music.gdead செய்திக்குழுவில் அல்லது அதுபோன்ற அமைப்பில் கலந்துகொள்ளும் சுவைஞர்.

net history: வலை வரலாறு.netiquette வலைப் பண்பாடு; இணைய நாகரிகம் : பிணைய நாகரிகம் என்று பொருள்படும் Network Etiquette என்பதன் சுருக்கச் சொல். மின்னஞ்சல் மற்றும் யூஸ்நெட் (செய்திக் குழுக்கள்) கட்டுரைகள் போன்ற மின்னணுச் செய்திகளை அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நெறிகள் பற்றிய கோட்பாடுகள். இணைய நாகரிகத்துக்கு ஒவ்வாத செயல்பாடுகள் சில: சர்ச்சைக்குரிய கருத்துகள் மன உணர்வுகளைப் புண்படுத்தும் செய்திகள் தனிப்பட்ட முறையில் சாடுதல் - தொடர்பில்லாத ஏராளமான குப்பைச் செய்திகளை அனுப்பி வைத்தல் ஒரு திரைப்படம், தொலைக்காட்சிப் படம், புதினம் போன்றவற்றின் கதைமுடிவை முன்பே அறிவித்துவிடல் தீங்கு விளைவிக்கும் செய்திகளை மறை யாக்கம் செய்யாமல் வெளியிடல் -தொடர்பில்லாத அஞ்சல் குழுவுக்கு தொடர்பில்லாத செய்திகளை அனுப்புதல்.

netizen : வலைவாசி; இணையக் குடிமகன் : இணையத்தில் அல்லது பிற பிணைய அமைப்புகளில் நிகழ்நிலைத் தகவல் தொடர்புகளில் பங்குபெறும் ஒருவர். குறிப்பாக இணையக் கலந்துரையாடல், அரட்டை போன்றவற்றில் பங்கு பெறுபவர்.

Net Meeting : நெட் மீட்டிங்: இணையக் கலந்துரையாடலுக்கான மைக்ரோசாஃப்டின் மென்பொருள்.

net news :நெட் நியூஸ் :ஒரு இணைய நிரல்.

NetPC : வலைப்பீசி; இணையக்கணினி : 1996ஆம் ஆண்டில் மைக் ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் உருவாக்கிய ஒரு கணினிப் பணித்தள வரன்முறை. குறிப்பாக விண்டோஸ் என்டி வழங்கன் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்களை இயக்கும் கணினிகளுக்கானது. கிளையன் கணினிகளில் இயங்கும் பயன்பாடுகளைக் குறிக்காது. net personality :வலைநபர் ;இணையத் திலகம்; இணையத் தளபதி : இணையத்தில் ஒரளவு செல்வாக்குப் பெற்ற நபரைக் குறிக்க வழங்கும் பேச்சுவழக்குச் சொல்.

net police : வலைக் காவலர்: இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த தம்மைத்தாமே காவலர்களாய் நியமித்துக் கொண்டு தாங்கள் சரியென நினைக்கும் விதிமுறைகளை நடைமுறைப் படுத்த முயல்பவர்கள். இணையப் பண்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக இவர்களின் நடவடிக்கைகள் அமையும். மின்னஞ்சல் வழியாக விருப்பத்துக்கு எதிரான விளம்பரங்களை அனுப்புபவர்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. செய்திக் குழுக்கள் அல்லது அஞ்சல் பட்டியல்களில் தவறான அரசியல் கருத்துரைகளை வெளியிடுபவர்களையும்