பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

network model

310

network terminator


|

செய்கிறது. ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்கு தகவல் இடம் பெயர்வதை ஒழுங்குபடுத்தும் மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம், போக்கு வரத்து) நடுவில் உள்ளது.

network model : பிணைய மாதிரியம்: தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணைய மாதிரியம் (2) படிநிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரியம், ஏறத்தாழ படிநிலை மாதிரியம் போன்றது. ஒரேயொரு முக்கிய வேறு பாடு உண்டு. பிணைய மாதிரி யத்தில் ஒர் ஏடு ஒன்றுக்கு மேற்பட்ட சேய் ஏடுகளைக் கொண்டிருக்க முடியும். பிணைய மாதிரிய அடிப்படையிலான ஒரு தரவுத் தள மேலாண்மை அமைப்பினை படி நிலை மாதிரியத்தைபோல மாற்றி யமைக்க முடியும்.

network modem :பிணைய இணக்கி: ஒரு பிணையத்தில் பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் இணக்கி. (எ-டு) ஒரு நிகழ்நிலைச் சேவையாளரை, ஓர் இணையச் சேவையாளரை, ஒரு சேவை அமைப்பை அல்லது பிற நிகழ்நிலை வளங்களை அணுக பயனாளர்கள் தொலைபேசி மூலம் அணுகும்போது இந்தப் பிணைய இணக்கிப் பயன்படுகிறது.

network neighbourhood : நெட்வொர்க் நெய்பர்குட் : பிணையச் சுற்றம்: விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் முகப்புத் திரையில் இடம்பெற்றுள்ள சின்னம். network news : பிணையச் செய்தி : இணையத்தில் இருக்கும் செய்திக் குழுக்கள். குறிப்பாக யூஸ்நெட் படிநிலையில் வந்த செய்திக் குழுக்களைக் குறிக்கும்.

network operation center:பிணையச் செயல்பாட்டு மையம் : ஒரு நிறு வனத்தில் பிணையப் பாதுகாப்புக்கு பொறுப்பான அலுவலகம். பிணை யத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதேவேளையில் பிணைய அமைப்பின் செயலிழப்பு நேரத்தைக் குறைக்கவும் முயலும்.

network protocol : பிணைய நெறிமுறை : ஒரு கணினிப் பிணையத்தில் தகவல் தொடர்பினை சாத்தியமாக்குவதற்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் அளபுருக்களின் தொகுதி.

network services பிணையச் சேவைகள் : 1. ஒரு நிறுவனச் சூழலில் பிணையம் மற்றும் கணினி களைப் பராமரிக்கும் பணிப்பிரிவு. 2. விண்டோஸ் பணிச்சூழலில், பிணைய அச்சிடல் மற்றும் கோப்புப் பகிர்வு போன்ற பிணையச் செயல்பாடுகளைச் சாத்தியமாக்கும் இயக்க முறைமையின் நீட்டிப்புகள்.

network software :பிணைய மென்பொருள்:ஒரு பிணையத்தில் வேறொரு கணினியை இணைத்துக் கொள்ள அல்லது பங்குபெற உதவும் மென்பொருள்.

network structure : பிணைய கட்டமைப்பு : ஒரு குறிப்பிட்ட பிணைய மாதிரியத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகளின் ஒழுங்கமைவு.

network terminator : பிணைய முடி வறுத்தி :பிணையச்சாதன இணைப்பி: ஒரு ஐஎஸ்டிஎன சாதனம. ஐஎஸ் டிஎன் தொலைபேசி இணைப்புத் தடத்திற்கும், முனைய தகவிகளுக்கும்(Terminal Adapter) அல்லது ஐஎஸ்டிஎன் தொலைபேசி போன்ற