பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

network termination

311

newline chareter


|

முனைய சாதனங்களுக்கும் இடயே இடைமுகமாய்ச்செயல்படும் சாதனம்.

network termination :பிணைய முடிப்பு.

Network Time Protocol : பிணைய நேர நெறிமுறை : ஒர் இணைய நெறி முறை. இணையத்தில் இணைக்கப் பட்டுள்ள கணினிகளின் ஒத்திசையா கடிகாரங்களுக்கான நெறிமுறை.

network of networks : பிணையங்களின் பிணையம். இணையத்தைக் குறிக்கும்.

network transport protocol :பிணைய போக்குவரத்து நெறிமுறை.

network virtual terminal : மெய்நிகர் முனையப் பிணையம்.

neural network : நரம்பணுப் பினையம்: மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்திலுள்ள நரம்பு செல்களான நியூரான்களின் செயல்பாட்டை ஒத்தவாறு இதன் செயல்பாடு அமையும். நரம்பணுப் பிணையம் என்பது சிறுசிறு செயலாக்க உறுப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகும். ஒவ்வோர் உறுப்பும் சிறு எண்ணிக்கையில் உள்ளீடுகள்/ வெளியீடுகளைக் கொண்டிருக்கும். இந்தச் செயலாக்க உறுப்புகள் உள் வீடுகளின் தன்மையைக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறன் படைத் தவை. எனவே இதன்மூலம் விரும்பிய வெளியீட்டைப் பெற முடியும். நரம்பணுப் பிணையங்கள் தோரணி உணர்தல், பேச்சுப் பகுப்பாய்வு மற்றும் பேச்சு ஒருங்கிணைவு போன்ற துறைகளில் பயன்படுகின்றன.

.ne.us : .என்.இ.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

new : புதிது.

new card : புதுய அட்டை;புது அட்டை.

new database : புதிய தரவுத் தளம்.

new file : புது கோப்பு.

new message : புது செய்தி.

new option : புதிய விருப்பத் தேர்வு.

next : அடுத்த.

next page button : அடுத்த பக்க பொத்தான்.

newbie : புதுமுகம்; கற்றுக்குட்டி : 1. இணையத்தில் அனுபவமில்லாத பயனாளர். 2. ஏற்கெனவே அடிக் கடிக் கேட்கப்படும் கேள்விகளுக் கான பகுதியில் விளக்கங்கள் இருந்த போதும் அதைப்பற்றி அறியாமல் அதே தகவலை ஐயமாகக் கேட்கும் அனுபவமில்லாத யூஸ்நெட் பயனாளர் குறித்து கிண்டலாகக் கூறப்படும் சொல்.

newline character : புதியவரி எழுத்து குறியீடு : திரைக்காட்சி அல்லது அச்சுப்பொறியில் காட்டியை அடுத்த வரியின் தொடக்கத்துக்கு நகர்த்தும் கட்டுப்பாட்டுக் குறியீடு. செயல் பாட்டளவில் புதியவரிக் குறியீடு என்பது நகர்த்தியின் திரும்புகை (carriage return), வரியூட்டல் (line feed) ஆகிய இரண்டு குறியீடுகளும் இணைந்த ஒன்றாகும்.