பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.nf

313

nickname


|

வனத்தின் தயாரிப்பு. இந்த நிறுவனம் பின்னாளில் நெக்ஸ்ட் சாஃப்ட்வேர் நிறுவனம் என்றழைக்கப்பட்டது. ஸ்டீவன் ஜாப்ஸ் (Steven Jobs) என்பவர் 1985இல் நிறுவிய ஒரு கணினித் தயாரிப்பு மற்றும் மென்பொருள் உருவாக்க நிறுவனம். இந்த நிறுவனத்தை 1995ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

.nf : .என்.எஃப் : ஒர் இணைய தள முகவரி நார்ஃபோல்க் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.nt.ca : என்எஃப்.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் நியூஃபவுண்ட்லாண்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ng : .என்ஜி : ஒர் இணைய தள முகவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.nh.us : என்ஹெச்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூ ஹேம்ப்ஸைர் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ni: என்ஐ : ஒர் இணைய தள முகவரி நிகராகுவா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NIC : நிக் : 1. பிணைய இடைமுக அட்டை என்று பொருள்படும் Network Interface Card என்பதன் சுருக்கம். 2. பிணையத் தகவல் மையம் என்று பொருள்படும் Network Information Center என்ற தொடரின் சுருக்கம். ஒரு பிணையத்தைப் பற்றியும் அதிலிருந்து பெறப்படும் சேவைகள் பற்றியும் பயனாளர் களுக்கு தகவல் வழங்கும் அமைப்பு. இணையத்தின் முதன்மை நிக், இன்டர்நிக் எனப்படுகிறது. அக இணையம் மற்றும் பிற தனியார் பிணையங்கள் தமக்கென தனியான நிக் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.

nickel cadmium battery : நிக்கல் கேட்மியம் மின்கலன்:கார மின்பகுப்புத் திரவம் கொண்ட மின்னூட்டத்தகு மின்கலம். இதே போன்ற ஈய அமில மின்கலன்களை விட நிக்கல் கேட்மியம் மின்கலன்கள் நீண்டநாட்கள் செயல்படுபவை. நீண்ட நாட்கள் சேமிக்க வல்லவை.

nickel metal hydride battery: நிக்கல் உலோக ஹைடிரைடு மின்கலன் : நிக்கல் கேட்மியம், காரப்பொருள் மின்கலன்களைவிட அதிக வாழ்நாளும் உயர்ந்த செயல்திறனும் கொண்ட மறு மின்னூட்டத்தகு மின்கலம்.

nickname : புனைபெயர்; செல்லப் பெயர் : மின்னஞ்சலில் பெறுநர் முகவரி இடம் பெறும் இடத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட முழுப் பிணைய முகவரிகளைத் தருவதற்குப் பதில் சுருக்கமாகப் பயன் படுத்தும் பெயர். (எ-டு) kumar@annauniv.edu ஏன்பதற்கு பதிலாக kumar என்பது புனைபெயராக இருக்கலாம். நிரலில் புனைபெயர் நிலைப்படுத்தப்பட்டது எனில், முழுப் பெயரையும் கொடுப்பதற் குப் பதில் kumar என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். கணினித் துறையில் பணியாற்றுபவர்களின் முகவரிகள் name@computer.