பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nis

314

nonmaskable interrupt


|

annauniv.edu என்றிருக்கலாம். computer faculty என்னும் புனைபெயர் கணினித் துறையைச் சார்ந்த அனைவரையும் குறிப்பதாக இருக்கலாம்.

nis : நிஸ்; என்ஐஎஸ் : பிணைய தகவல் சேவை எனப்பொருள்படும் Network Information Service stairp தொடரின் சுருக்கம்.

.nl : .என்எல் : ஒர் இணைய தள முகவரி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

NMOS OR N-MOS :என்-மாஸ் ; என்மாஸ்: N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Transistor) களில் மின் இணைப்புத்தடம் துளைகளின் நகர்வுகளால் ஏற்படுவதில்லை (மின்னணு ஓர் அனுவிலிருந்து இன்னோர் அணுவுக்கு இடம் பெயர்வதால் ஏற்படும் வெற்று இடம் துளை (hole) எனப்படுகிறது. மின்னணு இடம் பெயர்வதால்தான் துளை ஏற்படுகிறது. துளைகளைவிட மின்னணு வேகமாக இடம்பெயரும் என்பதால் என்மாஸ், பீமாலைவிட வேகமானது ஆனால் என்மாஸை வடிவமைப்பது கடினமானது அதிகச்செலவு பிடிக்கும்.

NNTP : என்என்டீபீ : பிணையச் செய்திப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Network News Transfer Protocal என்ற தொடரின் சுருக்கச் சொல். செய்திக் குழுக்களின் பரப்புகையை இந்த இணைய நெறிமுறை நிர்வகிக்கிறது.

nonconticuous data structure: தொடர்பறு தரவுக் கட்டமைப்பு : நினைவகத்தில் தொடர்ச்சியில்லாமல் உறுப்புகள் இருத்தப்படுகின்ற ஒரு தகவல் கட்டமைப்பை இவ்வாறு குறிக்கிறோம். வரைபட, மர வகையைச் சார்ந்த தகவல் கட்டமைப்புகளின் உறுப்புகள் நினைவகத்தில் தொடர்ச்சியின்றி ஆங்காங்கே இருத்தப்படுகின்றன. அடுத்தடுத்த உறுப்புகள் முகவரிச் சுட்டுகள் (pointers) மூலம் அறியப் படுகின்றன.

nondestructive readout : அழிவிலாப் படிப்பு : நினைவகத்தில் உள்ள தகவலைப் படித்தவுடன் அழிந்து போகாமல் படிக்கும் முறை. தகவலை அழியவிடாமல் இருத்தி வைக்கும் சேமிப்புத் தொழில்நுட்பம் அல்லது படித்தவுடன் தகவலை மீண்டும் புதுப்பிக்கும் தொழில் நுட்பம் மூலம் அழிவிலாப் படிப்பு இயல்வதாகிறது.

none : எதுவுமில்லை.

nonmaskable interrupt : மறைக்கவியலாக் குறுக்கீடு : மென்பொருள் மூலம் மற்றும் விசைப்பலகை அல்லது அதுபோன்ற சாதனங்களின் மூலம் உருவாக்கப்படும் குறுக்கீட்டுக் கோரிக்கைகளை மீறி முன்னுரிமை எடுத்துக் கொள்கின்ற ஒரு வன்பொருள் குறுக்கீடு இவ்வாறு அழைக்கப்படுகிறது. இத்தகைய குறுக்கீட்டை பிற சேவைக் கோரிக்கைகள் மீறிவிட முடியாது. மிக மோசமான நினைவகப் பிழை நிகழும்போது அல்லது மின் தடங்கலின்போது மட்டுமே இத்தகு மறைக்கவியலாக் குறுக்கீடு நுண் செயலிக்கு அனுப்பப்படும்.