பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nonprocedural language

315

normal


|

nonprocedural language : செயல் முறைசாரா மொழி: தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்றுக்கிடை யேயான உறவுமுறைகள் அடிப்படையில் வினவல்கள் மூலமாகக் குறிப்பிட்ட விடையைப் பெறும் மொழிகளை செயல்முறைசாரா மொழிகள் எனலாம். டி'பேஸ் ஃபாக்ஸ்புரோ, எஸ்கியூஎல் போன்ற மொழிகள் இவ்வகையில் அடக்கம். இவற்றை நான்காம் தலைமுறை மொழிகள் என்றும் கூறுவர்.

nontrivial : எளிதற்ற(து): எளிதான முறையில் தீர்வு காண முடியாதது. மிகவும் கடினமான பிரச்சினைக்கு சிக்கலான நிரலாக்கச் செயல்முறை மூலம் தீர்வு காண்பதை எளிதற்ற தீர்வுமுறை என்கிறோம்.

non uniform memory architecture : ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம் : சீக்குவென்ட் (Sequent)-இன் சீரிலா அணுகு நினைவகத்திற்காக வடி வமைக்கப்பட்ட முறைமைக் கட்டுமானம். ஒரு பகிர்வு நினைவக வகை. மையப்படுத்தப்பட்ட ஒற்றை நினைவகச் சில்லாக இல்லாமல் பல பகிர்வு நினைவகத் துண்டங்களைக் கொண்டதாக இருக்கும்.

.no : என்ஒ : ஒர் இணைய தள முகவரி நார்வே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

nonbreaking space :முறிவிலா இடவெளி : ஒரு சொல்லின் இரு பகுதிகள் அல்லது இரு சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது பிரிந்துவிடாமல் இருக்க வழக்கமான இடவெளி(Space)-க்குப்பதிலாக இடம்பெறச் செய்யும் குறியீடு. இரு பகுதிகளும் பிரியாமல் ஒரே வரியில் இருக்கச் செய்யும். திரு. அறிவரசு என்ற சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது இடமில்லாமையால் திரு. என்பது முந்தைய வரியிலும் அறிவரசு அடுத்த வரியிலும் இடம் பெறும். திரு. அறிவரசு என்ற சொற்கள் இணைபிரியாமல் ஒரே வரியில் நிற்கவேண்டுமெனில் இரு சொற் களுக்குமிடையே முறிவிலா இடவெளியை இடம்பெறச் செய்ய வேண்டும்.

non impact print : தொடா அச்சு: தாக்குறவிலா அச்சு.

nonvolatile memory : அழியா நினைவகம் : மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் அழியாமல் வைத்திருக்கும் சேமிப்புச் சாதனம். ரோம், இப்ரோம், ஃபிளாஷ் நினைவகம், குமிழ் நினைவகம் அல்லது மின் கலத்தினால் பாதுகாக்கப்படும் சீமாஸ் ரோம் போன்ற உள்ளக நினைவகத்தைக் குறிக்கும் சொல். சில வேளைகளில் வட்டுகளைக் குறிப்பதும் உண்டு.

No-op : செயற்படா; செயலிலா; வினையிலா.

NOP : No operation என்பதன் குறும் பெயர். செயலிலா என்பது பொருள்.

NOR circuit : இல் அல்லது மின்சுற்று.

NOR operation : இல்-அல்லது வாயில் செயலாக்கம்.

normal : இயல்பான.