பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AMI BIOS

30

amplitude modulation


வியன்னா வரிஜீனியாவைத் தலைமையக மாய்க் கொண்டது. அமெரிக்காவிலேயே மிகப் பெரிய இணையச் சேவை மையம்.

AMI BIOS : அமி பயாஸ் : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் பயன் படுத்துவதற்கென அமெரிக்கன் மெகாட்ரெண்ட்ஸ் நிறுவனம் (AMI) தயாரித்து விற்பனை செய்யும் ரோம் பயாஸ் (ROM BIOS). ரோம் சிப்பிலேயே பயாஸ் செயல்முறைகளுடன் மென்பொருள் தகவமைவு (Configuration) விவரங்களையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்புக்கூறாகும். பயனாளர் தன் கணினியின் நினைவகம் மற்றும் வட்டுகள் பற்றிய தகவமைவு விவரங்களை மாற்றியமைக்க தனியாக ஒரு வட்டினைப் பயன்படுத்தத் தேவையில்லை.

AMIS : Audio Media Intergration Standard: கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்

ᎪᎷᏢᏚ :ஆம்ப்ஸ் : உயர்நிலை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும், Advanced Mobile Phone Service என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அலைவரிசைப் பகிர்வு ஒன்று சேர்ப்பு (Fraquency Division Multiplexing) நுட்பத்தின், அடிப்படையில் செயல்படும் தொடக்ககால நடமாடும் தொலைபேசிச் சேவைகளில் ஒன்று.

amplifier, buffer: இடையகப் பெருக்கி

amplitude modulation : அலைவீச்சுப் பண்பேற்றம் : மின்காந்த அலை மூலம் நமது பேச்சுத் தகவலை ஏந்திச்செல்லும் பொருட்டு, இயல்பான தகவலை மாற்றியமைக்கின்ற ஒரு செயல்முறை. இம்முறையில், தகவல் அலையை, நிலையான அலைவெண் கொண்ட ஒரு மின்காந்த சுமப்பி அலையின் மீது செலுத்தி, அத்தகவல் அலையின் அலைவீச்சுக்கு ஏற்ப, சுமப்பி அலையின் அலைவீச்சு மாற்றியமைக்கப்பட்டு மறுமுனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.