பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

office links

321

OLE


office links : அலுவலகத் தொடுப்புகள்.

offline navigator : அகல்நிலை வழிச்செலுத்தித் அகல்நிலை திசைச்செலுத்தி : இணையத்திலிருந்து மின்னஞ்சல், வலைப்பக்கங்கள், செய்திக் குழுக் கட்டுரைகள் அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களிலுள்ள கருத்துரைகள் - இவற்றைப் பதிவிறக்கம் செய்து, நமது கணினியிலுள்ள வட்டில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னொரு சமயத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே அவற்றைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள். இணைய இணைப்புக்காக ஆகும் செலவு இதனால் மிச்சப்படுகிறது.

off page connector : தொடர்பிலா பக்க இணைப்பி.

ohm: ஓம் : மின்சாரத் தடையை அளப்பதற்கான அலகு. ஒரு மின் கடத்தியின் இருமுனைகளுக்கிடையே 1 வோல்ட் மின்னழுத்தம் தரப்படும்போது அதன் வழியே பாயும் மின்னோட்டம் 1 ஆம்பியராக இருப்பின் அக்கடத்தி ஏற்படுத்தும் மின்தடை 1 ஓம்.

.oh.us: ஓச்.யுஎஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ok : சரி.

ok/cancel : சரி/விடு.

.ok.us: ஓகே.யுஎஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் ஒக்லஹாமா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

OLAP database : ஓஎல்ஏபீ தரவுத் தளம் : நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயலாக்க தரவுத் தளம் என்று Online Analytical Processing Database சுருக்கம். வழக்கமான உறவுநிலைத் தகவல் தளங்களைவிட அதிகச் சிக்கலான வினவல்களைக் கையாளும் திறன்படைத்த ஓர் உறவு நிலைத் தரவுத் தளம். தகவல்களை பல்பரிமாண முறையில் அணுக முடியும். அதாவது தகவல்களை பல்வேறு தேர்வு விதிகளின் அடிப்படையில் பார்வையிட முடியும். மிகவும் தீர்க்கமான கணக்கீட்டுத் திறன் உண்டு. சிறப்புத் தன்மை வாய்ந்த சுட்டுவரிசை (indexing) நுட்பங்கள் உள்ளன.

OLE : ஒஎல்இ; ஒலே : பொருள் தொடுப்பும் உட்பொதிப்பும் என்று பொருள்படும் (Object Linking and Embedding என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பயன்பாட்டு மென்பொருள்களுக்கிடையே தகவலைப் பரிமாறிக் கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு தொழில்நுட்பம். படம் வரையும் மென்பொருள் கொண்டு ஒரு படம் வரையப்பட்டுள்ளது. அது ஒரு படிமக்கோப்பில் சேமிக்கப்பட்டுள்ளது. சொல்செயலி மென்பொருளில் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் படிமக்கோப்புக்கான தொடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனில், படமானது ஆவணத்தின் ஒர் அங்கமாகவே தோற்றமளிக்கும். தொடுப்புள்ள படத்தில் செய்யப்படும் மாறுதல்கள் ஆவணத்திலுள்ள படத்திலும் பிரதிபலிக்கும். இதனையே "பொருள் தொடுப்பு"