பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

operator, machine

325

optical character recognition


பாதைமுறை (Critical Path Method), புள்ளியியல் (Statistics), நிகழ் தகவியல் (Probability), தகவல் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

operator associativity: செயற்குறி இணைவு : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒரே முன்னுரிமையுள்ள இரண்டு செயற்குறிகள் எந்த வரிசையில் செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் செயற்குறிகளின் பண்புக் கூறு. இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ இருக்கலாம். பெரும்பாலான செயற்குறிகளின் இணைவு இடமிருந்து வலமாக இருக்கும். சி-மொழியில் சில செயற்குறிகள் வலமிருந்து இடமாகச் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

operator, machine : பொறிச் செயல்பாட்டாளர்; பொறி இயக்குநர்.

operator overloading : செயற்குறிப் பணிமிகுப்பு: ஒரு குறிப்பிட்ட செயற்குறி, ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் செயல்படும் எனில் அதனைப் பணி மிகுப்பு என்கிறோம். எடுத்துக்காட்டாக, + என்னும் கணக்கீட்டுச் செயற்குறி இரண்டு எண்களைக் கூட்டப் பயன்படும். அதனையே இரண்டு சரங்களை (strings) இணைக்கப் பயன்படுத்துவோம் ("Good" + "Morning") எனில், இதனைச் செயற்குறி பணிமிகுப்பு என்கிறோம். இங்கே + என்னும் அடையாளம் இருபுறமும் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் தரவு இன (Data Type) அடிப்படையில் செயல்படும். அடா, சி++, சி# மொழிகள் செயற்குறிப் பணிமிகுப்பை அனுமதிக்கின்றன. சி, ஜாவா போன்ற மொழிகள் இக்கருத்துருவை (concept) அனுமதிக்கவில்லை.

operator precedence : செயற்குறி முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் இடம்பெறும்போது அவை எந்த வரிசையில் இயக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை. அதிக முன்னுரிமை உள்ள செயற்குறி முதலில் செயல்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, 5x4+3 என்ற கணக்கீட்டில் முதலில் 5x4 செயல்பட்டு 20 ஆகும். பிறகு 20+3 செயல்பட்டு 23 ஆகும். 5+4x3 என்று இருப்பின் முதலில் 4x3=12 ஆகிப் பின் 5+12=17 ஆகும். பொதுவாக x, / ஆகியவை முதலிலும், +,- ஆகியவை அடுத்தும் செயல்படுத்தப்படும். ஆனால், கணக்கீட்டுத் தொடரில் பிறை அடைப்புக் குறிகள் இருப்பின் அவற்றுள் இருக்கும் கணக்கீடே எல்லாவற்றுக்கும் முன்பாகச் செயல்படும். 5x(4+3) என்று இருப்பின் 4+3=7 ஆகிப் பிறகு 5x7=35 ஆகும்.

optical character recognition: ஒளிவ எழுத்து உணர்வு : தாளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகளை அவற்றின் இருள், ஒளித் தோரணிகளை ஆய்வு செய்து அவ்வெழுத்துகளின் வடிவமைப்பைத் தீர்மானிக்கும் ஒரு மின்னணுச் சாதனத்தின் செயல்பாடு. வருடுபொறி அல்லது படிப்பி எழுத்துகளின் வடிவத்தைத் தீர்மானித்த பிறகு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துகளுடன் தோரணியை ஒப்பீடு செய்யும் எழுத்துணர் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அவை கணினி எழுத்துகளாக மாற்றப்படுகின்றன. இதன் பயன் என்னவெனில், ஏற்கெனவே அச்சிடப்பட்ட ஆவணங்களை வருடி அவற்றைக் கணினி ஆவணமாக மாற்றுவதுடன், உரைப்பகுதியை