பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ORB

327

Original Macintosh Keyboard


வழிமுறை. உயிர்நாடியான தகவலை பாதுகாக்க ஒரு கணினி முறைமைக்குள்ள தகுதிப் பாட்டை இத்தரவரிசை குறிக்கிறது.

ORB : ஓஆர்பி : பொருள் கோரிக்கைத் தரகர் எனப் பொருள்படும் Object Request Broker என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் கிளையன் ஒரு பொருளுக்கான கோரிக்கையை முன்வைக்கும் ஓர் இடைமுகம். ஓஆர்பி, கோரிக்கையை, பொருளை வைத்துள்ள வழங்கனுக்கு அனுப்பிவைக்கும். விடைமதிப்புகளை கிளையனுக்குத் திருப்பியனுப்பும்.

அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை

.org : ஆர்க்; ஓஆர்ஜி : இணையத்தின் களப்பெயர் அமைப்பு முறையில் உயர்நிலை களங்களுள் வணிக, கல்வி நிறுவனம் அல்லாத, ஆதாய நோக்கில் செயல்படாத நிறுவன அமைப்புகளைச் சுட்டும் பெயர். வணிக அமைப்புகள் .காம் (.com) என்ற பெயரையும், கல்வி நிறுவனங்கள் இடியு (.edu) என்ற பெயரையும் கொண்டுள்ளன. கணித்தமிழ் சங்கம் வணிக நிறுவனமோ, கல்வி நிறுவனமோ அல்ல. எனவே அதன் www.kanithamizh.org அமைந்துள்ளது.

organise favourites : கவர்வுகளை ஒழுங்குபடுத்து.

organiser : அமைப்பாளர்.

organisation file : கோப்பு ஒழுங்கமைப்பு.

orientation : ஆற்றுப்படுத்தல்.

Original Macintosh Keyboard : அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை : தொடக்ககால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப்பகுதி மற்றும் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப்பலகையை ஒத்தது. 58 விசைகளைக் கொண்டது. தட்டச்சுப் பலகையிலிருந்து இரண்டே இரண்டு மாற்றங்கள். கீழ் வரிசையில் இருபுறமும் உள்ள விருப்பத் தேர்வு விசைகள். இடவெளிப் பட்டையின் இடப்புறம் கட்டளை விசையும், வலப்புறம் நுழைவு விசையும் உள்ளன (Enter key).