பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amplitude

31

analytical engine


amplitude : வீச்சு; அலைவீச்சு : ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்ஞையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு. படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது.

anachromic : காலத்திற்குப்பொருந்தாத.

analog device : ஒத்திசைக் கருவி; தொடர்முறைச் சாதனம்.

analog display : ஒத்திசைக் காட்சி; தொடர்முறை சமிக்ஞை வடிவிலான திரைக் காட்சி : நிறம், நிழல் இவற்றின் அளவுகள் துண்டு துண்டான மதிப்புகளாக இல்லாமல் தொடர் மதிப்புகளாய் அமைந்த ஒளிக்காட்சி முறை.

analog input system : ஒத்திசை உள்ளீட்டு முறைமை; தொடர்முறை உள்ளீட்டு முறைமை.

analog line : ஒத்திசைத் தகவல் தடம்; தொடர்முறைச் சமிக்ஞை வடிவில் தகவலை ஏந்திச் செல்லும் ஊடகம் : தொடர்ச்சியில் நிலைமாறும் அலை வடிவிலான தகவல் சமிக்ஞைகளை ஏந்திச் செல்லும் தகவல் தொடர்பு ஊடகம். பரவலாகப் பயன்படுத்தப் படும் தொலைபேசி இணைப்புக் கம்பிகளை எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம்.

analog model : ஒத்திசை மாதிரி; தொடர்முறை உருமாதிரி.

analog modem : ஒத்திசை இணக்கி.

analog monitor : ஒத்திசைக் கணித்திரை; தொடர்முறைத் திரையகம்.

analog signal generator : ஒத்திசைச் சமிக்ஞை உருவாக்கி : தொடர்ச்சியாய் நிலைமாறும் அலைவடிவிலான சமிக்கைகளை உருவாக்கும் ஒரு சாதனம். ஒரு கணினியில் வட்டு இயக்கியின் சுழற்றியை இயக்கி வைக்க சிலவேளைகளில் இச்சாதனம் பயன்படுகிறது.

analog to digital converter (ADC) : தொடர்முறை - இலக்கமுறை மாற்றி.

analogical reasoning : ஒத்திசை அறிதல், ஒப்புமை அறிதல்.

analysis : பகுப்பாய்வு : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது சிக்கலின் பல்வேறு பரிமாணங்களையும் பல கோணங்களில் ஆய்வு செய்தல். கணினித் துறையைப் பொறுத்தவரை, பகுப்பாய்வு என்பது, பொதுவாக தொடர்வரிசைக் கட்டுப்பாடு, பிழைக் கட்டுப்பாடு மற்றும் திறன் மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஒரு சிக்கலை எளிதாக எதிர்கொள்ளும் பொருட்டு அதனை சிறுசிறு கூறுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்வது வழக்கமான நடைமுறை ஆகும்.

analysis, cost : செலவு பகுப்பாய்வு.

analysis, system : முறைமை பகுப்பாய்வு.

analyst/designer work bench : பகுப்பாய்வாளர்/வடிவமைப்பாளர் பணி இருக்கை.

analyst, programmer : நிரல் பகுப்பாய்வாளர்.

analyst, system : முறைமைப் பகுப்பாய்வாளர்.

analytical engine : பகுப்புப் பொறி; பகுப்பாய்வுப் பொறி : கணினியின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டின் கணித மேதை சார்லஸ் பாபேஜ், 1833ஆம் ஆண்டில் உருவாக்க முயன்ற, எந்திரவியல் அடிப்படையிலான கணக்கீட்டு எந்திரம். ஆனால் இதன் உருவாக்கம் நிறைவு பெறவில்லை. ஆனாலும்