பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

originate

328

OSF


originate : தொடங்கு.

orphan file : உறவிலிக் கோப்பு; அனாதைக் கோப்பு: கணினிச் சேமிப்பில் பயனற்றுப் போன பின்பும் தங்கிவிட்ட ஒரு கோப்பு. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பயன்பாடு செயல்படுவதற்கு உதவியாக உருவாக்கப்பட்ட கோப்பு. அந்தப் பயன்பாடு கணினியிலிருந்து நீக்கப்பட்டபின் அனாதை ஆகிவிடுகிறது.

.or.us : .ஓஆர்.யுஎஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் ஒரிகான் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

OS/2 : ஓஎஸ்/2 : ஐபிஎம் நிறுவனத்தின் இயக்க முறைமை, தொடக்க காலத்தில் ஐபிஎம், மைக்ரோ சாஃப்ட் இரண்டின் கூட்டுத் திட்டப்பணியாய் இருந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் விலகிக் கொண்டது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் (protected mode) செயல்படும். மெய்நிகர் நினைவகம் கொண்ட பல்பணியாக்க இயக்கமுறைமை. இன்டெல் 80286, 80386, +i486 மற்றும் பென்டியம் பிராசாசர்கள் கொண்ட சொந்தக்கணினிகளில் செயல்படவல்லது. பெரும்பாலான எம்எஸ்-டாஸ் பயன்பாடுகளும் ஓஎஸ்/2-வில் செயல்படும். அனைத்து எம்எஸ்-டாஸ் வட்டுகளையும் படிக்கும். பிரசென்டேஷன் மேனேஜர் என்கிற துணை அமைப்பைக் கொண்டது. இது வரைகலைப் பணிச்சூழலை வழங்குகிறது. பிணைய வசதிகளைப்பெற "லேன் மேனேஜர்" உண்டு. வங்கிகள் நிறுவியுள்ள பெரும்பாலான ஏடீஎம் மையங்களில் ஓஎஸ்/2 முறைமையே பயன்படுத்தப்படுகிறது.

oscillation : ஊசலாட்டம் : குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுகின்ற மாற்றத்துக்கு உள்ளாகும் நிலை. மின்னணுவியலில் ஊசலாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட சமிக்கையில் ஏற்படுவது.

oscillator : அலையியற்றி : ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறிக்கொண்டே இருக்கும் வெளியீட்டைத் தருகின்ற மின்னணுச் சுற்று. நிலையான அல்லது மாற்றத்தக்க வெளியீட்டைத் தரக்கூடிய வகையிலும் வடிவமைக்க முடியும். மின்னணுச் சுற்றுகளில் அலை இயற்றிகள் மிகவும் முக்கியமானவை. நிலையான அலைவரிசையை உருவாக்க சில அலை இயற்றிகள் குவார்ட்ஸ் படிகத்தைப் பயன்படுத்துகின்றன. சொந்தக் கணினிகளில் கடிகார அலைவரிசையை வழங்க ஓர் அலை இயற்றி பயன்படுத்தப்படுகிறது. 1 முதல் 200 மெகாஹெர்ட்ஸ் வரை துடிப்பவை. செயலியும் மற்றபிற மின்சுற்றுகளும் இதனடிப்படையில் இயங்குகின்றன.

OSF : ஓஎஸ்எஃப் : திறந்தநிலை மென்பொருள் கழகம் என்று Open Software Foundation என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிஇசி, ஐபிஎம், ஹெச்பி போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஆதாய நோக்கில்லாக் கூட்டமைப்பு. 1988இல் நிறுவப்பட்டது. யூனிக்ஸ் இயக்க முறைமையில் செயல்படும் நிரல்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வரன்முறைகளை வளர்த்தெடுப்பதும், மூல நிரல்வரைவுடன் மென் பொருள்களுக்கான உரிமங்

----