பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

OSPF

329

outline utility


களை உறுப்பினர்களுக்கு வழங்குவதும் இந்த அமைப்பின் நோக்கம். பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல் (Distributed Computing Environment), மோட்டிஃப் என்னும் வரைகலைப் பணிச் சூழல் (GUI), ஓஎஸ்எஃப்/1 என்னும் இயக்க முறைமை (யூனிக்ஸின் இன்னொரு வடிவம்) ஆகியவை ஓஎஸ்எஃபின் படைப்புகளில் சில

OSPF : ஓஎஸ்பீஎஃப் : திறந்த மீக்குறுபாதை முதலில் எனப் பொருள்படும் Open Shortest Path First என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் போன்ற ஐபீ பிணையங்களுக்கான திசைப்படுத்தும் நெறிமுறை. ஒவ்வொரு கணு(node)வையும் செய்தி சென்றடைவதற்கான மிகக்குறுகிய பாதை எது என்பதைக் கணக்கிட்டு திசைவி (Router) வழிப்படுத்தும். திசைவி அதனோடு இணைக்கப்பட்ட கணுக்களிலுள்ள தொடுப்பு - நிலை விளம்பரம் (Link-State Advertisements) என்றழைக்கப்படும் தகவலை, பிணையத்திலுள்ள பிற திசைவிகளுக்கு அனுப்பி வைக்கின்றன. அங்கே தொடுப்புநிலைத் தகவல் ஒன்று குவிக்கப்பட்டு மீக் குறுபாதை கணக்கிடப்படுகிறது.

OTOH : ஒடீஓஹெச் : இன்னொரு வகையில் பார்த்தால் எனப் பொருள் on the other hand என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல், இணையச் செய்திக்குழுக்கள் மற்றும் பிற விவாதக்குழுக்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

Outbox : வெளிச்செல் பெட்டி; செல்மடல் பெட்டி : மின்னஞ்சல் பயன்பாடுகளில் வெளியே அனுப்பப்படும் கடிதங்களைச் சேமித்து வைக்கும் பெட்டி.

outdent : வெளித்தள்ளு.

outer join : வெளி இணைப்பு: புறச்சேர்க்கை : தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப்பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தகவல்கள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்டவணைகளிலிருந்து தேவையான தகவலைப் பிரித்தெடுக்கப் பயன் படுத்தப்படும் பல்வேறு செயல் முறைகளில் இதுவும் ஒன்று. முதல் அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகள் இந்தச் செயல்பாட்டின் வெளிப்பாடாக அமையும். முதல் அட்டவணையிலுள்ள ஏடுகளுக்கு உறவுடைய ஏடுகள் இரண்டாவது அட்டவணையில் இருப்பின் அத்தகவல்கள் வெளியீட்டில் இடம் பெறும். அவ்வாறு இல்லாத ஏடுடன் வெற்று மதிப்புகளுடன் இடம் பெறும்.

outline : வெளிக்கோடு.

out line layout view button : வெளிக்கோடு உருவரை காட்சிப் பொத்தான்.

out-of-band signaling : கற்றைப்புறத்து சமிக்கை முறை : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் குரல் அல்லது தகவலை அனுப்புவதற்கான கற்றை அகலத்துக்கு வெளியிலுள்ள அலைவரிசைகளில், கட்டுப்பாட்டுச் சமிக்கை போன்ற சிலவற்றை அனுப்பும் முறை.

outline utility: வெளிக்கோட்டு பயன் கூறு.