பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

page-image file

332

PAP



அச்சுப்பொறி அப்பக்கத்தை அச்சிடும்.

page-image:file: பக்க-படிமக் கோப்பு: ஒரு பக்கத்தை அல்லது திரைப் படி மத்தை அச்சுப்பொறியோ அல்லது பிற காட்சிச் சாதனங்களோ உருவாக்குவதற்குத் தேவையான குறி முறைகளைக் கொண்டுள்ள ஒரு கோப்பு.

page layout : பக்க உருவரை.

page layout view button : பக்க உருவரைக் காட்சிப் பொத்தான்.

page number : பக்க எண்.

page orientation : பக்கத் திசையமைவு. நீள்மை ஆண்மை இரண்டில் ஒன்று. page preview : பக்க முன்காட்சி.

page setup/page preview : பக்க அமைவு/பக்க முன்காட்சி.

page size :பக்க அளவு.

pages per minute : பக்கங்கள் ஒரு நிமிடத்தில்: சுருக்கமாக பீபீஎம் (PPM அல்லது ppm) எனக் குறிக்கப்படும். ஒர் அச்சுப்பொறியின் வெளியீட்டுச் செயல்திறனைக் குறிக்கும் அளவீடு. ஒரு நிமிடத்தில் எத்தனை பக்கங்கள் அச்சிடும் என்பதைக் குறிக்கிறது. இந்த அளவீட்டை அச்சுப்பொறியைத் தயாரிக்கும் நிறுவனங்களே குறிப்பிடுகின்றன. பக்கம் என்பது வழக்கமான சாதாரணமான (ஏ4) பக்கத்தைக் குறிக்கும். அச்சிடும் பக்கங்களில் அதிகப்படியான வரை கலைப் படங்களோ எழுத்துரு அமைப்புகளோ இருப்பின் அச்சிடும் வேகம் அச்சுப்பொறியில் குறிப்பிட்டுள்ள பீபீஎம் வேகத்தை விட வெகுவாகக் குறைந்திருக்கும்.

page skip : பக்கம் விடுதல், பக்கத் தாவல்.

page Up : மேல் பக்கம், ஏறு பக்கம்.

page up key : மேல் பக்க விசை : பெரும்பாலான கணினி விசைப்பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgUp எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும்பாலானவற்றில் இதை அழுத்தியும், காட்டி (cursor) ஆவணத்தின் முந்தைய பக்கத்தின் தொடக்கத்தில் நிற்கும் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிகளுக்கு முன்னால் சென்று நிற்கும்.

paging memory : பக்கமாக்கும் நினைவகம்.

painter : வரைகலைஞர்; ஒவியர்.

panel, control: கட்டுப்பாட்டுத் பலகம்.

page size : தாள் உருவளவு.

paper source : தாள் வைப்பிடம்

paper tap verifier : காகித நாடா சரி பார்ப்பி, தாள்நாடா சரிபார்ப்புச்சாதனம்.

PAP : பீஏபீ : 1. நுழைசொல் சான்றுறுதி நெறிமுறை என்று பொருள்படும் Password Authentication Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முனைக்கு முனை நெறிமுறையை (point-to-point protocol) பயன்படுத்தும் வழங்கனில் பயனாளர் நுழைய முயலும்போது அவருடைய அடை யாளத்தைச் சரிபார்ப்பதற்கான ஒரு வழிமுறை. இதைவிடக் கண்டிப்பான சாப் (CHAP - Challenge Hand - Shake Authentication Protocol) நெறி முறை இல்லாதபோது பீஏபீ மிகவும்