பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paper-white

333

parallel database


பயன்தரும். பயனாளர் பெயரையும் நுழைசொல்லையும் மறையாக்க மின்றி வேறொரு நிரலுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நேரும் போதும் இது பயன்படும். 2. அச்சுப் பொறி அணுகல் நெறிமுறை என்று பொருள்படும் (Printer Access Protocol) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயராகவும் கொள்ளலாம். ஆப்பிள்டாக் பிணையங்களில் கணினிகளுக்கும் அச்சுப்பொறிகளுக்கும் இடையிலான தகவல் தொடர் பினை மேலாண்மை செய்யும் நெறி முறை ஆகும்.

paper-white : தாள்-வெண்மை : ஒற்றைநிற கணினித் திரையகத்தில் ஒருவகை. வெண்மைநிறப் பின் புலத்தில் கறுப்புநிற எழுத்துகளைக் கொண்டிருத்தல் இதன் இயல்பு. இத்தகைய திரையகங்கள், கணினிப் பதிப்பகம் மற்றும் சொல்செய லாக்கச் சூழல்களில் மிகவும் செல் வாக்குப் பெற்றவை. ஏனெனில், வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்துகள் அச்சிட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை இவை தருகின்றன.

paper-white monitor : தாள்-வெண்மைத் திரையகம் : அச்சிட்ட பக்கத் தை ஒத்திருக்கும், வெண்மைநிறப் பின்புலமும் கறுப்புநிற எழுத்து களும் கொண்ட கணினித் திரை யகம். சில உற்பத்தியாளர்கள் தாள்-வெண்மை என்பதை பாண்டுத் தாளில் இருப்பதுபோன்ற இழைக்கப் பட்ட வெண்ணிறப் பின் புலத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்.

paradigm : எடுத்துக்காட்டு; மேற் கோள், வாய்பாடு : ஒரு செயலாக் கத்துக்கோ அல்லது ஒரு முறை மைக்கோ மாதிரியத்தை வழங்கக் கூடிய ஒரு சரியான எடுத்துக் காட்டு அல்லது தோரணி.

parallel algorithm : இணைநிலை படிமுறை : ஒரு படிமுறையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படி முறைப் பகுதிகள் செயல்படுமாறு அமைத்தல். இணை நிலைப் படி முறைகள் பெரும்பாலும் பல் செயலாக்க சூழல்களில் பயன் படுத்தப்படுகின்றன.

parallal and serial port : இணை நிலை மற்றும் நேரியல் துறை.

parallel computing : இணைநிலை கணிப்பணி : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண அல்லது ஒரு பணியைச் செய்து முடிக்க பல கணினிகளையோ அல்லது பல செயலிகள் கொண்ட கணினி யையோ பயன்படுத்தும் முறை.

parallel conversation : இணை உரையாடல்.

parallel database : இணைநிலை தரவுத் தளம் : ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத் தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தகவல் பரிமாற்றங் கள், உள்ளீடு/வெளியீடு கையாளல், தகவல் இடையக நிறுத்தம் போன்ற தகவல் மேலாண்மைக் கோரிக்கை களை நிறைவேற்ற இவை பயன் படுத்திக் கொள்ளப்படும். ஒரு இணைநிலை தரவுத் தளம், ஏராள மான உடன்நிகழ் பணிகளை பல செயலிகள் மூலமாகவும் பல சேமிப்புச் சாதனங்களிலுள்ள தகவல் களிலிருந்தும் நிறைவேற்றிக் கொள்ளும் திறன்படைத்தது. பல நூறு கிகாபைட் தகவல் சேமிக்கப்