பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parallel error

334

pass by address


பட்டுள்ள தகவல் தளங்களிலும் விரைவான அணுகல் இயல்கிறது.

parallel error : இணைப் பிழை.

parallel operator : இணைநிலை செயற்குறி.

parallel operations: இணைச் செயல் பாடுகள்.

parallel server : இணைநிலை வழங்கன் : வழங்கனின் செயல்திறனை மேம்படுத்த ஏதேனும் ஒருவகை இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத்தும் கணினி அமைப்பு.

parallel transmission : இணைப் பரப்புகை.

parameter-driven : அளபுரு முடுக்கம் : ஒரு நிரல் அல்லது செயல்பாட்டின் இயல்பு அல்லது வெளியீடு, அதற்கு வழங்கப்படும் அளபுருக்களின் மதிப்புகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது.

parameter passing: அளபுரு அனுப்பு கை: நிரலாக்கத்தில் ஒருவகைச் செயலாக்கம். ஒரு செயல்முறை அல்லது செயல்கூறின் அழைப்பு செயல் படுத்தப்படும்போது குறிப்பு அள புருக்களுக்கு மெய்யான அளபுருக்களின் மதிப்புகளைப் பதிலீடு செய்வது.

parameter RAM : அளபுரு ரேம் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களின் தாய்ப்பலகைகளில் மின்கலத் தின் உதவியால் பாதுகாக்கப்படும் சீமாஸ்-ரேமில் உள்ள ஒரு பகுதி. கணினி அமைப்பின் தகவமைவு பற்றிய தகவல் இதில் சேமிக்கப் பட்டிருக்கும். பீரேம் (PRAM) என்று சுருக்கமாகக் கூறுவர்.

parent menu : தலைமைப் பட்டி.

parity : சமன் : சமமாய் இருத்தலைக் குறிக்கும். கணினித் தகவல் பரி மாற்றத்தில் பிழையைச் சோதிக்கும் செயல்முறைக்கு சமன் சரிபார்ப்பு (parity check) என்று பெயர். ஒரு துண்மித் தொகுதி ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அனுப்பப்படும்போது எத்தனை 1-கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு அந்த எண்ணிக்கை ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதைப் பார்த்து 1 அல்லது 0-வை அந்தத் துண்மித் தொகுதியோடு சேர்த்து அனுப்புவர். இந்த 1 அல்லது 0, சமன்துண்மி(parity bit) எனப்படும். பெறும் முனையில் சமன் துண்மி அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட துண்மித் தொகுதி பெறப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படும். துண்மித் தொகுதி ஒர் எழுத்துக்குறி எனில், செங்குத்து மிகைமைச் சரிபார்ப்பு (vertical redundancy check) என்றும், வேறுவகையான தொகுதி எனில், கிடைமட்ட மிகைமைச் சரிபார்ப்பு என்றும் கூறுவர். இரண்டு இணக்கி களுக்கிடையேயான தகவல் தொடர்பு சமன் சரிபார்ப்பு ஒரு முக்கிய அளபுரு ஆகும். சமன் துண்மி சரியாக இருந்தால் மட்டுமே இரண்டு இணக்கி களும் தகவலைப்பரிமாறிக்கொள்ளும்.

party check, even : இரட்டைச் சமன் சரிபார்ப்பு.

parity check, odd : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு.

part address : முகவரிப் பகுதி.

pass by address : முகவரி மூலம் அனுப்பல்: ஒரு துணைநிரல் கூறுக்கு தருமதிப்பு அல்லது அளபுருக்களை அனுப்பி வைத்தலில் ஒரு வகை. இம்முறையில் அழைக்கும் துணை