பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pattern,bit

336

PCI local bus


pattern, bit : பிட் தோரணி.

patterns : தோரணிகள்

pause key : நிறுத்தல் விசை நிறுத்தி வைப்பு விசை, இடைநிறுத்து விசை: 1. ஒரு நிரல் அல்லது கட்டளையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் விசை. அனைத்து வகைவிசைப்பலகைகளிலும் இத் விசை உண்டு. ஒரு நீண்ட பட்டியல் திரையில் வேகமாக மேல்நோக்கி உருளும்போது இந்த விசையைப் பயன்படுத்தி நிறுத்தி நிறுத்தி பட்டி யலைப் பார்வையிடலாம். 2. குறிப் பிட்ட நிரலில், நிரலர் விருப்பப்படி விசைப்பலகையிலுள்ள ஒரு குறிப் பிட்ட விசையை அழுத்தினால் நிரல்/செயல்பாடு தற்காலிமாக நிற்கு மாறு செய்யலாம். குறிப்பாக கணினி விளையாட்டு நிரல்களில் விளை யாட்டை நடுவிலேயே நிறுத்தி வைக்க P என்னும் விசை பயன் படுத்தப்படுவதுண்டு.

pause printing: இடைவிடு அச்சிடல்

pay to play : பணத்துக்குப் பாட்டு

PC-compatible : பீசி-ஒத்தியல்பு: ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/எக்ஸ்டீ மற்றும் பீசி/ஏ.டீ வன்பொருள், மென்பொருள் வரன்முறைகளைக் கொண்ட கணினிகளைக் குறிக்கிறது. இதுவே கணினித் தொழில்துறை யில் சொந்தக் கணினிகளுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறை ஆகிப் போயிற்று. இவை இன்டெல் 80x86 அல்லது அதற்கு ஒத்தியல்பான சிப்புகளில் செயல்பட வல்லவை. இன்றைக்குப் பெரும் பாலான பீ.சி-ஒத்தியல் புக் கணினி கள் ஐபிஎம் அல்லாத நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன. சில வேளைகளில் இவை நகலிகள் அல்லது வார்ப்புகள் (clones) என்றழைக்கப்படுகின்றன. ஐபிஎம் பீசி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC-DOS : பீ.சி-டாஸ் : சொந்தக் கணினிக்கான வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Personal Computer - Disk Operating System என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு. தொடக்க காலங்களில் ஐபிஎம்முக் காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸ் இயக்க முறைமையை தயாரித்து வழங்கி வந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் சொந்தமாக எம்எஸ் டாஸ் என வெளியிடலாயிற்று. ஐபிஎம் தன் சொந்த இயக்க முறைமையை பிசி-டாஸ் என்ற பெயரில்வெளியிட்டது. எம்எஸ். டாஸ், பீ.சி-டாஸ் இரண்டும் முழுக்க முழுக்க ஒத்திருக்கும். சில பயன்பாட்டு நிரல்களின் கோப்புப் பெயர் மட்டுமே இரண்டிலும் வெவ்வேறாக இருக்கும்.

PCI local bus : பீசிஐ உள்ளகப் பாட்டை : புற உறுப்பு சேர்த்திணைப்பு உள்ளகப் பாட்டை எனப் பொருள்தரும் Pheripheral Component Interconnect Local Bus என்ற தொடரின் சுருக்கம். ஒரு கணினியில் பீசிஐ வகை விரிவாக்க அட்டைகள் 10 வரை பொருத்த முடிகிற உள்ளகப் பாட்டை அமைப்பிற்காக இன்டெல் நிறுவனம் வரையறுத்த வரன்முறை. இப்பாட்டை செயல்பட பிசிஐ வகைச் செருகுவாய்கள் ஒன்றில் பீசிஐ கட்டுப்படுத்தி அட்டை செருகப் பட்டிருக்க வேண்டும். பாட்டையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் சமிக்கை பயணிக்கும் ஒருவகை ஒன்று சேர்ப்பு நுட்பத்தை (Multiplexing Technique) செயலாக்க பீசிஐ வரன்முறை அனுமதிக்கிறது.