பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PCMCIA

337

PC/XT Keyboard


PCMCIA : பீசிஎம்சிஐஏ : சொந்தக் கணினி நினைவக அட்டைக்கான பன்னாட்டுச் சங்கம் என்று பொருள்படும் Personal Computer Memory Card International Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கணினி வன்பொருள் உற்பத்தி யாளர்கள் மற்றும் விற்பனையாளர் களின் குழு. பீசி அட்டை அடிப் படையிலான புறச் சாதனங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் செருகு வாய்கள் பற்றிய ஒரு பொதுவான தர வரையறையை உருவாக்க இக்குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக மடிக் கணினி, உள்ளங்கைக் கணினி மற்றும் பிற கையகக் கணினி வகைகளுக் கும், ஏனைய நுண்ணறிவு மின்னணுச் சாதனங்களுக்குமான தர வரையறை இது. 1990இல் முதன்முதலில் வெளியீடு-1 என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்ட, பீ.சி-அட்டைகளுக்கான தர வரையறையும் பீசிஎம்சிஐஏ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது.

PCMCIA connector : பீசிஎம்சிஐஏ, இணைப்பி : 68-பின் உள்ள துளை இணைப்பி (Female Connector). பிசிஎம்சிஐஏ செருகுவாயில் உள்ளது. பிசி-அட்டையிலுள்ள 68-பின் நுழை இணைப்பி (Male Connector) யூடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டது.

PCMCIA slot : பீசிஎம்சிஐஏ செருகு வாய் : கணினியின் கட்டமைப்பில் அதன் புறச்சாதனத்தில் அல்லது பிற அறிவு நுட்ப மின்னணுச் சாதனத்தில் பீசி அட்டை (PC card)யை இணைப்பதற்காக இடம் பெற்றுள்ள ஒரு திறப்பு. பீசி அட்டை செருகுவாய் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC memory card : பீசி நினைவாக அட்டை : 1. ஒரு கணினியின் ராம் நினைவகத்தை அதிகரிக்கின்ற கூடு தல் மின்சுற்று அட்டை. 2. பீசிஎம்சிஐஏ வரையறுத்துள்ள வகை-I சார்நத பீசி அட்டை. இது வழக்கமான நிலைத்த ரேம் சிப்புகளைக் கொண்டிருக்கும். ஒரு சிறிய மின்கலனால் தகவலைக் காப்பாற்றி வைக்கும். கணினிக்குக் கூடுதல் ரேம் நினைவகம் தருவதற்கென வடிவமைக்கப்பட்டது.

PCT : பீசிடி : நிரலைப் புரிந்துகொள் கருவி எனப் பொருள்படும் Programme Comprehension Tool என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இது ஒரு மென்பொருள் பொறிநுட்பக் கருவியாகும். கணினி நிரல்களின் புரிதல் மற்றும்/அல்லது செயல்படு தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

PC/XT : பீசி/எக்ஸ்டி : 1981இல் அறி முகப்படுத்தப்பட்ட மூல ஐபிஎம் சொந்தக் கணினி. இன்டெல் 8088 மையச் செயலகத்தைக் கொண்டது.

PC/XT keyboard : பீசி/எக்ஸ்டீ விசைப்பலகை : ஐபிஎம் சொந்தக் கணினிக்கான மூல விசைப்பலகை திடமானது. நம்பகமானது. 83 விசைகள் கொண்டது. இதில், பீசி/எக்ஸ்டி விசைப்பலகை