பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

analytical machine

32

anonymous


இப்பொறிதான் உலகின் முதல் பொதுப்பயன் இலக்கமுறைக் கணினி (Digital Computer) என்று போற்றப்படுகிறது.

analytical machine : பகுப்பாய்வு எந்திரம்,

analyze : பகுப்பாய்

anchor : நங்கூரம்

anchor cell : தாக்கு கலம். விரிதாள் பயன்பாட்டில் ஒரு பணித்தாளில் காட்டி நிற்கும் கலம்.

angle bracket : கோண அடைப்புக் குறி.

animated cursors : அசைவூட்ட சுட்டுக்குறிகள்; இயங்கு இடங்காட்டி.

animated GIF : அசைவூட்ட ஜிஃப்; இயங்கும் ஜிஃப், நகர் பட ஜிஃப் : வரைகலைப் படங்கள் கோப்புகளாக வட்டுகளில் பதியப்படும்போது பல்வேறு தொழில் நுட்ப அடிப்படையில் பதியப்படுகின்றன. அவற்றுள் ஜிஃப் என்பது குறிப்பிட்ட வடிவமைப்பைக் குறிக்கிறது. வரைகலை மாறுகொள் வடிவாக்கம் (Graphics Interchange Format) என்பதன் சுருக்கமே (GIF) எனப்படுகிறது. இந்த வடிவமைப்பிலுள்ள வரைகலைப் படங்கள் வட்டுகளில் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. ஜிஃப் வடிவமைப் பில் அமைந்த வரைகலைப் பட உருவங்களை கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்து திரையிடும்போது, அந்தப்படம் உயிரோட்டம் பெற்று இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

animation picture : அசைவூட்டப் படம்

animation window : அசைவூட்டச் சாளரம்

annexure : இணைப்பு

anode : நேர்மின் முனை, நேர்மின் வாய் : மின்னணுவியலில் பயன் படுத்தப்படும் சொல். நேர் மின்னூட்டம் பெற்ற முனையை அல்லது மின்வாயை நோக்கி மின்னணு (எலெக்ட்ரான்) பாய்கிறது.

anonymity : பெயர் மறைப்பு: பெயர் ஒளிப்பு: பெயரிடாமை : இணையத்தில் மின்னஞ்சல் அல்லது செய்திக் குழுவில் தகவல் அல்லது கட்டுரை அனுப்பும்போது, அனுப்பியர் எவர் என்பதைப் பெறுபவர் தெரிந்து கொள்ள முடியாதவாறு அனுப்பி வைக்கும்முறை. இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் பொதுவாக அனுப்புபவரின் மின்னஞ்சல் முகவரி தகவலின் தலைப்புப் பகுதியில் இடம்பெறும். தகவல் பரிமாற்றத்துக்கான கிளையன் அல்லது கேட்பன் (client) மென்பொருள்தான் இந்த முகவரியைத் தகவலின் தலைப்பில் இடும். பெயர்மறைப்புச் செய்ய, ஒரு பெயர் மறைப்பு மறுமடல் வழங்கன் மூலம் செய்தியை அனுப்பி வைக்க வேண்டும். செய்தியைப் பெறுபவர், பதில் அனுப்ப வசதியாக அனுப்பியவரின் முகவரி, வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். செய்தியைப் பெறுபவர் அனுப்பியவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதேயொழிய பதில் அனுப்ப முடியும்.

anonymous : அனானிமஸ் : பெயரிலி : இணையத்திலுள்ள எவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பல்வகைக் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள எஃப்.டி.பீ.