பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.pe

339

pen computer


கட்டமைப்பு என்று பொருள்படும் Parallel Data Structure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறுக்கம். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் மூலக் கோப்பகத்தில் (Root Directory) மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு. ஆப்பிள் ஷேர் நிரலின்கீழ் பகிர்ந்து கொள்ளப்படும் கோப்பு இது. பல்வேறு கோப்புறைகளின் அணுகு சலுகைத் (Access Privilege) தகவலைக் கொண்டிருக்கும்.

.pe : .பீஇ: ஓர் இணையதள முகவரி பெரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

peak load : உச்சச் சுமை .

peak volume : உச்ச ஒலி அளவு.

.pe.ca : .பீஇ.சி.ஏ :ஓர் இணைய தள முகவரி கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வார்டு தீவுகளைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

pedagogical development: கற்பித்தல் நெறிமுறை.

peep : எச்சரிக்கையொலி.

peer to peer : சம உரிமை, சகாவுக்குச் சகா, சமனிக்குச் சமனி,

peer-to-peer architecture : சம உரிமைக் கட்டுமானம் : தகவல் தொடர்புக்கும் தகவலைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரே நிரலை அல்லது ஒரே வகையான நிரலைப் பயன்படுத்துகின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் பிணைக்கப்பட்ட ஒரு பிணையம். சமனி (peer) என அழைக்கப்படும் ஒவ்வொரு கணினியும் சமமான கடப்பாடுகளைக் கொண்டவை. பிணையத்தில் ஒவ்வொரு கணினியும் பிறவற்றுக்கு வழங்கனாகச் செயல்படுகின்றன. கிளையன்/வழங்கன் கட்டுமானத்தில் உள்ளதுபோல் ஒரு தனி கோப்பு வழங்கன் இப்பிணையத்தில் தேவையில்லை. எனினும் தகவல் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது கிளையன்/வழங்கன் அமைப்பினைப்போல் செயல்திறன் இருக்காது. இக்கட்டுமானம் சமஉரிமைப் பிணையம் (peer-to-peer network) என்றும் அழைக்கப்படும்.

peer-to-peer communications : சம உரிமைத் தகவல் தொடர்பு : அடுக்கு நிலைக் கட்டுமான அடிப்படையில் அமைந்த ஒரு பிணையத்தில் ஒரே தகவல் தொடர்பு மட்டத்தில் செயல் படக்கூடிய சாதனங்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம். ஒன்று வழங்கன் (server) இன்னொன்று கிளையன் (client) என்கிற பாகுபாடு இதில் இல்லை.

PEL : பீஈஎல் : படப்புள்ளி.

pen computer : பேனாக் கணினி : முதன்மை உள்ளீட்டுச் சாதனமாக விசைப்பலகைக்குப் பதிலாக பேனா (எழுத்தாணி) பயன்படுத்தப்படுகிற கணினி வகை. பேனாக் கணினி பெரும்பாலும் மிகச்சிறியதாக கையடக்கமான சாதனமாக இருக் கும். எல்சிடி திரை போன்ற குறை கடத்தி அடிப்படையிலான தட்டை வடிவ திரையகம் கொண்டவை. பேனா உள்ளீட்டுச் சாதனத்தில் பணியாற்றுவதற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனியான இயக்க முறைமையில் செயல்படும். அல்லது இத்தகு சிறப்புப் பயன் சாதனத்துக்கென்றே உருவாக்கப் பட்ட தனிப்பட்ட இயக்க முறைமையில் செயல்படும். சொந்த இலக்க