பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



phoenix BIOS

343

photorealism



டிகிரி நகர்வு இருக்கும். அலையின் படிநிலையை நேரெதிராக மாற்ற முடியும்.

phoenix BIOS: ஃபோனிக்ஸ் பயாஸ்: ஃபோனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரிக்கும் ரோம் பயாஸ் (ROM BIOS) ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்கு உகந்தது. பீசி வார்ப்புக் கணினிகளுக்கான மிகவும் செல்வாக்குப் பெற்ற ரோம் பயாஸ். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளிடையே, சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டவுடனேயே ஃபோனிக்ஸ் மிகவும் புகழ்பெற்று விட்டது.

phone dialer : தொலைபேசிச் சுழற்றி.

phoneme occurance : சொல்லில் எழுத்து வருகை.

phonetic key board : ஒலியியல் விசைப்பலகை,

phone connector: பேசி இணைப்பு: நுண்பேசி அல்லது ஒரு இணை தலைபேசி (Head Phone) போன்ற ஒரு சாதனத்தை ஒரு கேட் பொலிக் கருவி அல்லது ஒரு கணினியின் புறச் சாதனம் அல்லது கேட் பொலித் திறனுள்ள தகவி ஆகிய வற்றுடன் இணைக்கப் பயன்படும் ஓர் உடனிணைப்பு.

phonological analysis ஒலியமைப்புப் பகுப்பாய்வு

photocD : ஃபோட்டோ சிடி, ஒளிப் பட சிடி, ஒளிப்படக் குறுவட்டு :கோடாக் நிறுவனம் உருவாக்கிய இலக்கமுறையாக்கத் தொழில் நுட் பம், 35மிமீ சுருள், நெகட்டிவ்கள், படப்பலகைகள் (slides), வருடப் பட்ட படிமங்கள் ஆகியவற்றை ஒரு குறுவட்டில் சேமிக்கும் முறை. கோடாக் ஃபோட்டோ சிடி இமேஜ் பேக் என்னும் கோப்பு வடிவாக்க முறை என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக பிசிடி என்பர். பெரும் பாலான ஒளிப்பட, படச் சுருள் தொழிலகங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. ஃபோட்டோ சிடியில் சேமிக்கப்படும் படிமங் களை சிடி-ரோம் மற்றும் பிசிடி கோப்புகளைப் படிக்கும் மென்பொருள் உள்ள எந்தவொரு கணினியிலும் பார்க்க முடியும். சிடி-க்களில் பதியப்பட்டுள்ள படிமங்களைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட எந்தவொரு கருவியிலும் இப்படிமங்களைக் காண முடியும்.

photoconductor : ஒளியில் கடத்தி: ஒளிபடும்போது கடத்தும் திறம் அதிகரிக்கின்ற ஒரு பொருள். ஒளியில் கடத்திகள் பெரும்பாலும் ஒளியுணர்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒளியிழை வடங்களில் ஒளியை ஏற்று அதனை மின்துடிப்பாக மாற்றும் பணியை இவை செய்கின்றன.

photo editor : ஒளிப்பட தொகுப்பி: வருடப்பட்ட ஒளிப்படம் போன்ற படிமங்களை இலக்கமுறை வடிவில் கையாள்வதற்கான வரை கலைப் பயன்பாடு.

photographic : ஒளிப்படம்.

photorealism : நடப்பியல் ஒளிப்படம், ஒளிப்பட நடப்பியல்; ஒளிப் பட எதார்த்தம் : ஒளிப்படத்துக்கு அல்லது நடப்பு வாழ்வின் தரத்துக்கு படங்களை/படிமங்களை உரு