பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PICT

345

.pit


PICT : பிக்ட்: பொருள்நோக்கு முறையிலோ பிட்-மேப் முறையிலோ வரைகலைப் படிமங்களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க வரையறை. ஆப்பிள் மெக்கின்டோஷ் பயன்பாடுகளில் முதன் முதலாக பிக்ட் கோப்பு வடிவாக்க முறை பயன்படுத்தப்பட்டது. எனினும், பல ஐபிஎம் ஒத்தியல்புப் பயன்பாடுகளும் பிக்ட் கோப்புகளை படிக்க முடியும்.

picture : படம்.

picture box : படப்பெட்டி.

picture in picture : படத்துள் படம்.

ping of death :மரண பிங், ; மரண அடி மரணத் தாக்கு : இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஓர் அழிவு நடவடிக்கை. இணையத் தகவல் பரிமாற்றத்தில் ஒரு தகவல் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதைவிடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறிமுறையில் இணையத்தின் வழியாக ஒரு தொலைவுக் கணினிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அக்கணினியை நிலைகுலையச் செய்ய முடியும்.

ping-pong buffer : பிங்-பாங் இடையகம் : இரு கூறுகளான இடை நினைவகம். இரட்டை இடையகம் எனலாம். இதிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி மாற்றி உள்ளீட்டால் நிரப்பப்படுவதும் வெளியீட்டுக்கு வழித்தெடுப்பதும் நடைபெறும். இதன் காரணமாய் ஏறத்தாழ தொடர்ச்சியான உள்ளீட்டு/வெளி யீட்டுத் தகவல்களின் தாரை பாய்ந்து கொண்டிருக்கும்.

pin grid array : பின் கட்டக் கோவை: பலகையில் சிப்புகளைப் பொருத்தும் வழிமுறை. குறிப்பாக ஏராளமான பின்களைக் கொண்ட சிப்புகளுக்குப் பொருத்தமான முறை. பின்கட்டக் கோவை சிப்புகளில், பின்கள் சிப்புவின் அடிப்பாகத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இரட்டை உள்ளிணைப்புத் தொகுப்புள்ள சிப்புகளிலும், ஈயமில்லா சிப்புச் சுமப்பித் தொகுப்புகளிலும் பின்கள் சிப்புவின் பக்கவாட்டு ஒரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும்.

pipelining : முறைவழிப்படுத்தல் : 1. நினைவகத்திலிருந்து ஆணைகளைக் கொணர்ந்து குறிவிலக்கம் செய்து செயல்படுத்துவதில் ஒரு வழிமுறை. இம்முறையில் ஒரே நேரத்தில் பல நிரலாணைகளை வெவ்வேறு செயல் நிலைகளில் கொணர்ந்து குறிவிலக்கம் செய்து செயல்படுத்த முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட நிரலை வேகமாகச் செயல்படுத்த முடியும். நுண்செயலி தேவையின்றிக் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நுண்செயலி ஓர் ஆணையைச் செயல்படுத்தி முடிக்கும்போது அடுத்த ஆணை தயாராக இருக்கும். 2. இணைநிலைச் செயலாக்கத்தில் (parallel processing) ஆணைகள் ஒரு செயலாக்க அலகிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பிவைக்கப்படும். தொழிலகங்களில் தொகுப்புப் பணித்தொடர் அமைப்பு (assembly line) போன்றது. ஒவ்வோர் அலகும் ஒரு குறிப்பிட்ட வகைச் செயல் பாட்டில் திறன் பெற்றிருக்கும்.

.pit : .பிட் : பேக்ஐடீ (pack IT) எனும் முறையில் இறுக்கிச் சுருக்கப்படும் ஆவணக் கோப்புகளின் வகைப்பெயர் (extension).