பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

play button

347

PNP transistor

play button : இயக்குக் குமிழ்.

player : இயக்கி.

PLCC : பீ.எல்சிசி : ஈயமற்ற பிளாஸ் டிக் சிப்புச் சுமப்பி என்ற பொருள்படும் Plastic Leadless Chip Carrier என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பலகைகளில் சிப்புகளைப் பொருத்துவதில் பின்பற்றப்படும் ஈயமற்ற சிப்புசுமப்பி முறையின் ஒரு வேறுபாடான வகை. செலவு குறைவானது. இரண்டு சுமப்பிகளும் தோற்றத்தில் ஒன்று போல இருப்பினும் பீ.எல்சிசி-க்கள் பருநிலையில் ஈயமற்ற சிப்புச் சுமப்பியுடன் ஒத்தியல்பற்றவை. ஏனெனில் அவை பீங்கான் (ceramic) பொருளால் ஆனவை.


plotter, data : தரவு வரைவி; தரவு வரைவுபொறி.


plotter resolution : வரைவு தெளிவுத் திறன்.


plotter, x-y : x-y வரைவி.


plug and play : இணைத்து - இயக்கு; பொருத்தி-இயக்கு : இன்டெல் நிறுவனம் உருவாக்கிய வரன்முறைத் தொகுதி. ஒரு பீசியை இயக்கும் போது, திரையகம், இணக்கி மற்றும் அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களை தானாகவே அடையாளங் கண்டு தகவமைவுகளை அமைத்துக் கொள்ளும். பயனாளர் ஒருவர் புறச்சாதனம் ஒன்றை கணினியுடன் இணைத்து இயக்கிக் கொள்ளலாம். தனியாகத் தகவமைவுகளைக் குறிக்க வேண்டியதில்லை. இணைத்து - இயக்கு வசதி வேண்டிய பிசி-க்களில், இணைத்து-இயக்கு வசதியுள்ள பயாஸ், இணைத்து இயக்குவதற்கான விரிவாக்க அட்டையும் இருக்க வேண்டும்.


plug-in : கூடுதல் வசதி : 1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென் பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசதி மென்பொருள்கள் வெளியிடப்பட்டன. பொதுவாக இணைய உலாவி (Internet Browser) ஹெச்டீஎம்எல் ஆவணத்திற்குள் உட்பொதித்த, அசைவூட்டம், ஒளிக் காட்சி, கேட்பொலி தொடர்பான கோப்புகளை அடையாளம் காணாது. கூடுதல் வசதி மென்பொருளை நிறுவிக் கொண்டால் இது இயல்வதாகும். இப்போதெல்லாம் அனைத்து நிறுவனங்களுமே தத்தமது மென் பொருள் தொகுப்புகளுக்குக் கூடுதல் வசதி மென்பொருள்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.


.pm . .பீ.எம் : ஒர் இணைய தள முகவரி. செயின்ட் பியாரே மிக்குலான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.


.pn : .பீ.என் : ஒர் இணைய தள முகவரி. பிட் கைர்ன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.


PNP transistor : பீஎன்பீ மின்மப் பெருக்கி : இருதுருவ (bipolar) மின்மப் பெருக்கிகளுள் ஒருவகை. இதன் அடிவாய் (base) என்(N) - வகைப் பொருளால் ஆனது. பீ - வகைப் பொருளால் ஆன உமிழி (emitter) மற்றும் திரட்டி (collector)