பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

portal

351

portait monitor


பிட்மேப் வரைகலைப் படிமங் களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க முறை. ஜிஃப் (GIF) வடிவாக்க முறைக்கு மாற்றானது. ஆனால் ஜிஃப் வடிவாக்க முறைக் குள்ள சட்டக் கட்டுதிட்டங்கள் எதுவுமில்லை. சுருக்கமாக பிஎன்ஜி (png) என்பர்.


portal : வலைவாசல்.


port conflict : துறை முரண்.


port enumerator : துறைக் கணக்கெடுப்பி : விண்டோஸ் இயக்க முறைமையில் இணைத்து-இயக்கு (play and play) அமைப்பின் ஓர் அங்கம். கணினியை இயக்கும் போது, இந்த நிரல் உள்ளிட்டு/ வெளியீட்டுத் துறைகளைக் கண்டறிந்து தகவமைவு மேலாளருக்குத் (configuration manager) தெரிவிக்கும்.


port expander : துறை விரிவாக்கி : ஒரே துறையில் பல சாதனங்களை இணைக்கப் பயன்படும் ஒருவன் பொருள்நுட்பம். இம்முறையில் ஒரு துறையில் பல சாதனங்கள் பொருத்தப்பட்டாலும் ஒரு நேரத் தில் ஒரு சாதனம் மட்டுமே துறையைப் பயன்படுத்திக் கொள்ளும்.


port number : துறை எண் : இணையத்தில் இணைக்கப்பட்ட கணினியில் ஒரு குறிப்பிட்ட செயலாக் கத்துக்கென ஐபி பொதிகளை அனுப்பிவைக்கப் பயன்படும் எண். சில துறை எண்கள் நன்கறிந்த துறையெண்கள் என்றழைக்கப்படுகின்றன. உலகளவில் ஒரு குறிப் பிட்ட சேவைக்கென நிரந்தரமாய் ஒதுக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, எஸ்எம்டீ.பீ.யின்கீழ் மின்னஞ்சல் தகவல்கள் எப்போதுமே துறையெண் 25-க்கு அனுப்பப்படுகின்றன. எஃடீபீ-க்கு துறை எண் 21. ஹெச்டீடீ.பீ-க்கு துறை எண் - 80. டெல்நெட் போன்ற சேவைகளுக்கு அவை தொடங்கும்போது தற்காலிக நிலையில்லா துறையெண்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தில், அந்த எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். முடிந்தவுடன் அந்த எண்ணின் பயனும் முடிந்துவிடும். டீசிபீ மற்றும் யுடிபீ நெறிமுறைகளில் மொத்தம் 65,535 துறை எண்களைப் பயன்படுத்த முடியும். 1 முதல் 1024 வரை சிறப்புத் துறை எண்கள். நிரலர்கள் தம் சொந்த நிரல்களில் 1024க்கு மேற்பட்ட எண்களையே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


port settings : துறை அமைப்புகள்.


portrait format : நீள்மை வடிவம்; செங்குத்து உருவமைவு.


portrait monitor : நீள்மை திரையகம் : அகலத்தைவிட உயரம் அதிகமிருக்கும் கணினித் திரையகம்.



நீள்மைத் திரையகம்

8½-11 அங்குலத்தாளின் அளவுக்கு ஒத்த விகிதத்தில் இருக்கும் (அதே அளவு இருக்கும் என்பதில்லை).