பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ports

352

postmaster



ports : துறைகள்.

POS : போஸ் : விற்பனை முனையம் எனப் பொருள்படும் Point Of Sale என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கடையில் பொருள்களுக்கான விலையைச் செலுத்தும் இடம். பெரும்பாலும் இந்த முனையங்களில் விற்பனைக்கான விலைச்சிட்டை தயாரிப்பு பணிகள் முழுக்கவும் கணினிமயமாக்கப்பட்டிருக்கும். பொருளின் மீது ஒட்டப்பட்டுள்ள விலைச்சீட்டு அல்லது பட்டைக் கோடு, வருடி மூலம் படிக்கப்பட்டு விலைச் சிட்டை தயாரிக்கப்படும். மின்னணு பணப் பதிவேடுகள் இருக்கும். விற்பனை தொடர்பான அனைத்து தகவல்களும் சிறப்பு சாதனங்கள் மூலம் பதியப்படும். இதுபோன்ற முனையங்கள் மிகப்பெரிய தானியங்கு பல்பொருள் அங்காடிகளில் செயல்படுகின்றன.

POSIT : போஸிட் : திறந்தநிலை முறைமை இணையச் செயல் பாட்டுத் தொழில் நுட்பத்துக்கான தனிக் குறிப்புகள் எனப் பொருள்படும் Profiles For Open Systems Internet Working Technology என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அமெரிக்க அரசின் பிணையக் கருவிகளுக்கான கட்டாயமற்ற தர வரையறைகள். டீசிபி/ஐபீ நெறிமுறையை முற்றிலும் போஸிட் ஏற்கிறது. இது காஸிப் (GOSIP) புக்கு அடுத்து வந்ததாகும்.

position : நிலை.

position, bit: துண்மி நிலை; பிட்இடநிலை.

position x : x அச்சு ஆயத்தொலை.

position y : y அச்சு ஆயத்தொலை

POSIX : போசிக்ஸ் : யூனிக்ஸுக்கான கையாண்மை இயக்க முறைமை இடைமுகம் எனப் பொருள்படும் Portable Operating System Interface for Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். போசிக்ஸ் தர வரையறைப்படி அமைந்த நிரல்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினியில் எளிதாக செயல்படுத்த முடியும். போசிக்ஸ், யூனிக்ஸ் முறைமைச் சேவைகள் அடிப்படையில் அமைந்தது. எனினும் வேறுபல இயக்க முறைகளாலும் செயல் படுத்தப்படும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

post : அஞ்சல்; அஞ்சல்செய்; அஞ்சலிடு : செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடலில் ஒரு கட்டுரை அளித்தல், பருநிலையிலுள்ள அறிக்கைப் பலகையில் அறிவிப்புகளை ஒட்டுதல் என்ற சொல்லிலிருந்து இச்சொல் உருவானது.

post document operator: பின்குறிப்பு செயற்குறி.

post increment operator: பின்கூட்டு செயற்குறி.

postmaster : போஸ்ட் மாஸ்டர் (அஞ்சல் அதிகாரி) : 1. ஓர் அஞ்சல் வழங்கனில் மின்னஞ்சல் சேவைகளைப் பராமரிக்கும் பொறுப்பினை வகிப்பவரின் புகுபதிகைப் (logon) பெயர் (அதுவே, அவரின் மின்னஞ்சல் முகவரியுமாகும்). மின்னஞ்சல் சேவையில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்/பெறுதலில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதெனில் போஸ்ட்மாஸ்டர் என்ற பெயருக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தால், அஞ்சல் வழங்கனின்