பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PowerPC Reference Platform

355

precedence



சில்லுகளின் அடிப்படையில் ஐபிஎம், ஆப்பிள், மோட்டோ ரோலா நிறுவனங்கள் உருவாக்கிய பணித்தளம். ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளைப் பயன்படுத்த இப்பணித்தளம் வழிசெய்கிறது. மேக் ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் இயக்க முறைமைகளில் செயல்படலாம். அந்த இயக்க முறைமைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள்களையும் பயன்படுத்தலாம்.

PowerPC Reference Platform : பவர்பிசி மேற்குறிப்புப் பணித்தளம் : ஐபிஎம் உருவாக்கிய திறந்தநிலை முறைமை தர வரையறை. பல்வேறு பட்ட நிறுவனங்கள் உருவாக்கிய பவர்பீசி முறைமைகளுக்கிடையே ஒத்தியல்பை உறுதி செய்வதே ஐபிஎம் இதனை வடிவமைப்பதற்கான நோக்கமாகும். தற்போதைய ஆப்பிள் பவர்பிசி மெக்கின்டோஷ் முறைமைகள் ஐபிஎம்மின் பவர்பீசி மேற்குறிப்பு பணித்தளத்துடன் ஒத்தியல்பற்றவையாய் உள்ளன. வருங்காலப் பதிப்புகள் ஒத்தியல் புடையவையாய் இருக்க வாய்ப்புண்டு. சுருக்கமாக பீ.ரெப் (PReP) என்றழைக்கப்படுகிறது.

power telephone network: திறன்மிகு, தொலைபேசிப் பிணையம்.

PPP : பீபீபீ : நேரடி இணைப்பு நெறி முறை என்று பொருள்படும் Point to Point Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொலைபேசி இணைப்பு வழியாக ஒருகணினியை இணையத்தோடு இணைப்பதற்கென 1991ஆம் ஆண்டில் இணையப் பொறியியல் முனைப்புக்குழு (Internet Engineering Task Force) உருவாக்கிய தகவல் தொடுப்பு நெறிமுறை (Data Link Protocol). ஸ்லிப் (SLIP) நெறிமுறையைவிடக் கூடுதலான தகவல் ஒழுங்கு மற்றும் தகவல் பாதுகாப்புக் கொண்டது. ஆனால் சற்றே சிக்கல் மிகுந்தது.

.pr: .பீஆர்: ஓர் இணைய தள முகவரி போர்ட்டோ ரீக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PRAM : பிரேம் : அளபுரு ரேம் எனப்பொருள்படும் Parameter RAM என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினிகளில் ரேம் நினைவகத்தின் ஒரு பகுதி. கணினியின் தேதி, நேரம், திரைத்தோற்றம் மற்றும் பிற கட்டுப்பாட்டுப் பலகத்தின் அமைப்புக் கூறுகள் போன்ற தகவமைவுத் தகவல்களை பதிந்து வைத்துள்ளரேம் நினைவகப் பகுதி.

P-Rating : பீ-தரமிடல்; பீ-தரஅளவீடு: செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் Performance Rating என்பதன் சுருக்கம். ஐபிஎம், சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகளின் ஒட்டுமொத்தத் பலன் (throughput) அடிப்படையில் அமைந்தது. முன்பெல்லாம் நுண் செயலியின் கடிகார வேகமே தர அளவீட்டின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. சிப்புக் கட்டுமானங்களில் உள்ள வேறுபாடு, கணினியைப் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்துவது போன்றவை கணக்கில் கொள்ளப்படவில்லை.

precedence : முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் மதிப்புகள் கணக்கிடப்படும் வரிசை. பொது