பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ANSI graphics

34

antonym dictionary


செய்திகளைத் திரையிட அன்சிக் கட்டளைகள் (எஸ்கேப் வரிசை) பயன்படுகின்றன. இத்தகைய கட்டளைகள் அடங்கிய, எம்எஸ்-டாஸ் கணினிகளில் நிறுவப்படத் தக்க சாதன இயக்கிக் கோப்பு 'அன்சி.சிஸ்' என்றழைக்கப்படுகிறது.

ANSI graphics : அன்சி வரைகலை

ANSI key board : அன்சி விசைப் பலகை

ANSI screen control :அன்சி திரைக் கட்டுப்பாடு.

answer only modem : தகவல் பெறு இணக்கி; அழைப்பேற்பு இணக்கி; பதிலுக்கு மட்டுமான இணக்கி. இவ்வகை இணக்கிகள் வருகின்ற தகவல்களை ஏற்கும். ஆனால் தகவல் அனுப்பும் திறன் அற்றவை.

answer/originate modem : தகவல் பெறு/தரு இணக்கி: இவ்வகை இணக்கிகள் தகவல் அனுப்பவும் அழைப்புகளை ஏற்கவும் திறனுள்ளவை. பொதுவாக இவ்வகை இணக்கிகளே புழக்கத்தில் உள்ளன.

anticedent driver reasoning : முன்னிகழ்வு ஏதுவாதம்.

anticipatory paging : எதிர்பார்ப்பு. பக்கமாக்கல்.

antidote : முறிப்பி.

anti-glare : கூசொளித் தடுப்பு : கணினித் திரையில் வெளியிலிருந்து வரும் வெளிச்சம் பட்டுப் பிரதிபளிப்பதைக் குறைக்கும் நடவடிக்கை. பிரதிபலிப்பைக் குறைக்கும் வேதியல் பொருளை கணினித் திரையில் பூசுதல், கூசொளியைத் தடுக்கும் ஒரு சல்லடைத் திரையை கணினித் திரையின்மேல் இடல் அல்லது வெறுமனே வெளி வெளிச்சம் பயனாளர் கண்களுக்கு நேராகப் பிரதிபலிக்காத வகையில் கணினித் திரையை குறிப்பிட்ட திசையில் திருப்பி வைத்தல் - போன்ற நடவடிக்கைகள் மூலம் கூசொளியைத் தடுக்கலாம்.

antiglare filter : கூசொளி வடிகட்டி

antistatic device : நிலை மின்சாரத் தடுப்பு சாதனம் : கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தகவல் இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரை விரிப்பாக இருக்கலாம். கணினியோடு இணைத்து மணிக்கட்டில் கட்டப்படும் ஒயராக இருக்கலாம். அல்லது நிலைமின்சாரத்தைத் தடுக்கும் தைலத்தைப் பூசிக்கொள்வதாய் இருக்கலாம்.

antivirus programme : நச்சுநிரல் எதிர்ப்புச் செயல்நிரல்; நச்சுநிரல் எதிர்ப்பி : ஒரு கணினியின் சேமிப்பு வட்டிலும் நினைவகத்திலும் தங்கியிருந்து ஊறு விளைவிக்கும் ஆணைத் தொகுப்பை வைரஸ் அல்லது நச்சுநிரல் என்கிறோம். அத்தகைய நச்சுநிரல் நமது கணினியின் சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ உள்ளதா என்பதைக் கண்டறியவும், இருப்பின் அதனைக் களையவும் திறனுள்ள ஆணைத் தொகுப்பை நச்சுநிரல் எதிர்ப்பி என்கிறோம். பிணையம் (network) அல்லது இணையம் (internet) வழியாக பதிவிறக்கம் (download) செய்யும் கோப்புகளில் நச்சுநிரல் ஒட்டிக் கொண்டுள்ளதா என்பதை அறிந்து சொல்கின்ற எதிர்ப்பிகளும் உள்ளன.

antonym dictionary : எதிர்ச்சொல் அகராதி.