பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print job

358

print server



அச்சுப்பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத் தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவல், நினைவகத்தின் ஒருபகுதியில் தற்காலிகமாக இருத்திவைக்கப்படுகிறது. இந்த நினைவகப்பகுதி அச்சு இடையகம் அல்லது அச்சு இடைநினைவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைநினைவகப் பகுதி (1) ரேம் (RAM) நினைவகம் (2) அச்சுப்பொறி (3) கணினிக்கும் அச்சுப்பொறிக்கும் இடையேயுள்ள ஒரு தனி சாதனம் (4) வட்டு - ஆகிய இவற்றுள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு இருப்பினும், மெதுவாகச் செயல்படும் அச்சுப்பொறிக்கும் வேகமாகச் செயல்படும் கணினிக்கும் இடையே, தகவலின் தற்காலிகத் தங்குமிடமாகச் செயல்படுகிறது. அச்சு இடையகங்கள் வசதிகள் அடிப்படையில் வேறுபடுகின்றன. சில வற்றில் ஒருசில எழுத்துகளையே இருத்த முடியும். சிலவற்றில் அச்சிடு வதற்கான கோப்புகளை ஒரு சாரை (Quene)யில் நிறுத்திவைத்துக்கையாள முடியும். மறு அச்சிடல், சில அச்சுப் பணிகளை நீக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்யமுடியும்.

print job : அச்சுப் பணி : பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப் பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்கலாம்; நூறுபக் கங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனியாக அச்சிடுவதைத் தவிர்க்க, சில மென்பொருள்கள், பல ஆவணங்களை ஒரு குழுவாகச் சேர்த்து ஒரு அச்சுப் பணியாகச் செய்வதும் உண்டு.

print mode : அச்சுப் பாங்கு : அச்சு வெளியீட்டின் வடிவமைப்பைக் குறிக்கும் பொதுவான சொல். நீளவாக்கில் (portrait), அகலவாக்கில் (landscape) அச்சிடலாம். எழுத்தின் தரம், உருவளவு ஆகியவற்றையும் இச்சொல் குறிக்கும். புள்ளியணி அச்சுப்பொறி (dot-matrix printer) இரண்டு வகையான அச்சுப்பாங்குகள் உள்ளன. எழுத்துத்தரம் (Letter Quality-LQ), உயர் எழுத்துத்தரம் (Near Letter Quality - NLQ). Sla, அச்சுப் பொறிகள் ஆஸ்கி மற்றும் போஸ்ட்கிரிப்ட் எழுத்து வடிவங்களையும் ஏற்கும்.

print preview : அச்சு முன்காட்சி

print screen key : திரை அச்சு விசை : ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளின் விசைப்பலகைகளில் இருக்கும் ஒரு விசை. இவ்விசையை அழுத்தும்போது திரையில் தோற்றமளிக்கும் எழுத்துகளை அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவைக்கும். விண்டோஸ் இயக்க முறைமையில் இந்த விசையை அழுத்தினால் திரைத்தோற்றம் கிளிப்-போர்டில் பதியும். அதனை ஒரு வட்டுக் கோப்பாகச் சேமிக்கலாம். மாற்று (Alt) மற்றும் திரையச்சு (print screen) ஆகிய இரு விசைகளையும் சேர்த்து அழுத்தினால் இயக்கத்தில் இருக்கும் சாளரம் (Active Window) மட்டும் கிளிப்-போர்டில் பதியும். ஆப்பிள் கணினிகளில் ஒத்தியல்பு கருதி இவ்விசை வைக்கப்பட்டுள்ளது.

print server : அச்சு வழங்கன் : ஒரு பிணையத்தில் அச்சுப்பொறிகளை மேலாண்மை செய்வதற்கென தனி