பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print setup

359

printer driver



யாக ஒதுக்கப்படும் ஒரு பணி நிலையக் கணினி, பிணையத்தி லுள்ள எந்தவொரு பணிநிலையக் கணினியும் அச்சு வழங்கனாகச் செயல்பட முடியும்.

print setup : அச்சு அமைப்புமுறை; அச்சு அமைவு.

print text page : அச்சிடு,

print wheel : அச்சு உருளை; அச்சு சக்கரம்.

print using the following driver : கீழ்காணும் இயக்கி மூலம் அச்சிடு.

print zone : அச்சு வட்டாரம், அச்சு மண்டலம்.

print to file : கோப்பில் அச்சிடு: அச்சிடுவதற்கென வடிவமைக்கப் பட்ட ஒர் ஆவணத்தை அச்சுப் பொறிக்கு அனுப்புவதற்குப் பதி லாக, அப்படியே ஒரு கோப்பில் சேமித்து வைப்பதற்கான கட்டளை. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இத்தகைய வசதி உள்ளது.

printer, barrel : சுழல் உருளை அச்சு.

printer, chain : தொடர் அச்சுப் பொறி.

printer, character எழுத்து அச்சுப்பொறி.

printer controller : அச்சுப் பொறிக்கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி : ஒர் அச்சுப்பொறி யில் குறிப்பாக ஒரு பக்க-அச்சுப் பொறியின் செயலாக்கத்திற்கான வன்பொருள். இது ராஸ்டர் படிமச் செயலி, நினைவகம் மற்றும் பொதுப்பயன் நுண்செயலிகளையும் உள்ளடக்கியது. அச்சுப்பொறிக் கட்டுப்படுத்தி சொந்தக் கணினியின் ஒர் அங்கமாகவும் இருக்க முடியும். அச்சுப் பொறி இயக்கி மிகுவேக வடத்தின் மூலமாக கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

Printer Control Language : அச்சுப் பொறி கட்டுப்பாட்டு மொழி ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் தன்னுடைய லேசர்ஜெட், டெஸ்க் ஜெட் மற்றும் ரக்டுரைட்டர் ஆகிய அச்சுப்பொறிகளில் பயன்படுத்திய மொழி. லேசர் அச்சுப்பொறிச் சந்தையில் லேசர்ஜெட் முன்னணி இடம் வகிப்பதால் அச்சுப்பொறி கட்டுப்பாட்டு மொழியே நிலைத்த தர வரையறையாய் ஆகிவிட்டது.

printer, daisy wheel : டெய்ஸி சக்கர அச்சுப்பொறி.

printer, dot : புள்ளி அச்சுப்பொறி.

printer, dotmatrix புள்ளி அச்சுப்பொறி.

printer driver : அச்சுப்பொறி இயக்கி: பல்வேறு பயன்பாட்டுத் தொகுப்பு கள் ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறி யில் அச்சிடுவதைச் இயல்விப்பதற் கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள். அக்குறிப்பிட்ட அச்சுப்பொறியின் வன்பொருள் அமைப்பு, அகநிலை மொழிபற்றிக் கவலையின்றி அச்சிடலாம். பயன் பாட்டுத் தொகுப்புகள் பல்வேறு வகையான அச்சுப்பொறிகளை அவற்றுக்குரிய சரியான இயக்கி நிரல்களின் உதவிகளுடன் பயன் படுத்திக்கொள்ள முடியும். இக் காலத்தில் வரைகலைப் பணித்தள இயக்க முறைமைகள் தம்மகத்தே கொண்டுள்ள இதுபோன்ற இயக்கி நிரல்களை பயன்பாட்டுத் தொகுப்பு கள் ஒவ்வொன்றும், தங்களுக்கென இயக்கிநிரல்களைவைத்துக்கொள்ளத் தேவையில்லை.