பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

printer engine

360

printer,wire



printer engine :அச்சுப் பொறி எந்திரம் : லேசர் அச்சுப்பொறி போன்ற பக்க அச்சுப்பொறிகளில் அச்சிடும் பணியை நிறைவேற்றுகிற பாகம். பெரும்பாலான அச்சுப் பொறி எந்திரங்கள் தன்னிறைவு பெற்றவை யாய், மாற்றத்தகு மைப்பேழை களைத் தம்மகத்தே கொண்டுள்ளன. இந்த எந்திரம் அச்சுப்பொறிக் கட்டுப் படுத்தியினின்றும் வேறுபடுகிறது. உலகில் பெருமளவு பயன்படுத்தப் படும் அச்சுப்பொறி எந்திரங்கள் கேனான் (Canon) நிறுவனம் தயாரித்தவை.

printer file : அச்சுப்பொறிக் கோப்பு : அச்சுப்பொறிக்கு அச்சிட அனுப்பப்படும் தகவல்களை ஒரு கணினிக் கோப்புக்கு திசைதிருப்பி சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இத்தகைய கோப்பு பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப் படுகிறது. எடுத்துக்காட்டாக, அச்சுக்கு அனுப்பப்படும் வெளியீட்டை அப்படியே இன்னொரு கணினிக்கு அல்லது இன்னொரு நிரலுக்கு உள்ளீடாகத் தர முடியும். பின்னொரு நாளில் இக் கோப்பினை நேரடியாக அச்சுப் பொறிக்கு அனுப்பி எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சிலவேளைகளில் அச்சுப்பொறி இயக்கிக் கோப் பினைத் தவறுதலாக சிலர் அச்சுப் பொறிக்கோப்பு எனக் குறிப்பிடுகின்றனர்.

printer font : அச்சுப்பொறி எழுத்துரு: அச்சுப்பொறிக்குள் தங்கியிருக்கும் அல்லது அச்சுப்பொறிக்கென வைத் திருக்கும் ஒர் எழுத்துரு. இத்தகைய எழுத்துருக்கள் அச்சுப் பொறிக் குள்ளேயே உள்ளமைக்கப்பட்டிருக் கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துருப் பொதி யுறைகளிலும் கிடைப்பதுண்டு.

printer format : அச்சு வடிவம்.

printer head : அச்சுமுனை

printer layour sheet : அச்சுப் பொறி உருவரைத் தாள்.

printer, line : வரி அச்சுப் பொறி.

printer maintenance : அச்சுப் பொறி பாராமரிப்பு.

printer, matrix : அணி அச்சுப் பொறி.

printer, page : பக்க அச்சுப் பொறி.

printer port : அச்சுத்துறை: அச்சுப் பொறித் துறை : ஒரு சொந்தக் கணினியில் ஒரு அச்சுப்பொறியை இணைக்கக் கூடிய டம். பீசி ஒத்தியல்புக் கணினிகளில் பெரும் பாலும் இணைநிலைத் துறைகளே (parallel ports) அச்சுத் துறையாக பயன் படுத்தப்படுகின்றன. இயக்க முறைமை, இதனை எல்பீடீ (LPT) என்னும் தருக்க சாதனப் பெயராக அடையாளம் காண்கிறது. சில அச்சுப்பொறிகளுக்குத் நேரியல் துறைகளையும்(serial ports) பயன் படுத்திக்கொள்ள முடியும். ஆனால் முன்கூட்டியே இயக்க முறைமைக்கு இதை உணர்த்திவிட வேண்டும். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் பெரும்பாலும் நேரியல் துறைகளே அச்சுப்பொறிக்குப் பயன் படுத்தப்படுகின்றன.

printer, quality : அச்சுப் தரம்.

printer stand : அச்சுப் பொறி மனை.

printer, thermal : வெப்ப அச்சுப் பொறி

பொறி. printer, wheel : சக்கர அச்சுப்பொறி. printer, wire : 5ublSl.